பஞ்சாப்பில் ஏற்பட்ட கொடூரம்… பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து நாப்கின் சோதனை!..

339

பள்ளிக் கழிவறையில், நாப்கின் கிடந்ததால், ஆடைகளை களைந்து ஆசிரியர்கள் இருவர் பள்ளி மாணவிகளை சோதனையிட்ட விவகாரம் குறித்து, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஃபாசில்கா மாவட்டத்தின் குந்தால் என்ற கிராமத்தின் அரசு பள்ளியில் தான் இந்த பேரவலம் அரங்கேறியுள்ளது.

இவ்வாறு சோதனைக்கு ஆளான, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறியதை அடுத்து, இப்பிரச்சனை தெரிய வந்தது.

இதுகுறித்து வேதனையை வெளியிட்டிருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதோடு, இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டிருக்கிறார்.