இது மட்டும் தானா இன்னும் ஏதாவது இருக்கா இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல்ல

835

இது மட்டும் தானா இன்னும் ஏதாவது இருக்கா இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மார்பு பெருசா இருக்கிறது என் தப்பா? ஆனா, இந்த ஊரே ஒரு மாதிரி பாக்குதே – My Story

பத்து வயசு வரைக்கும் நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஆடி, ஓடி சந்தோஷமா என்னோட குழந்தை பருவத்த அனுபவிச்சு வாழ்ந்துட்டு வந்தேன். அப்ப தான் என் உடம்புல ஒரு மாற்றம் உண்டாக ஆரம்பிச்சது. அத தடுக்கவும் முடியல, மறைக்கவும் முடியல.
சின்ன வயசுல இருந்தே என்ன வீட்டுல, குடும்பத்துல எல்லாரும் என்ன என் பாட்டி மாதிரின்னு சொல்லுவாங்க. இந்த மாற்றம் கூட பாட்டிக்கு இருந்த மாதிரியேன்னு அம்மா அப்பப்ப சொல்லி நொந்துக்கும். ஆனா, இந்த மாற்றத்த நானா ஒன்னும் ஏற்படுத்திக்கல. அதுவா உண்டாச்சு. இது மரபணு ரீதியான மற்றம். இத எப்படி தடுக்க முடியும்?

Real Life Story: Having Big Breasts is not My Fault.எல்லா குழந்தைகளும் அழகழகா கவுன் போட்டு விளையாடிட்டு இருக்கும் போது நான் பாவாடை சட்டை போட்டுட்டு இருந்தேன். என் வயசொத்த மத்த பொண்ணுங்க பாவாடை சட்டை போட்டுக்கிட்டு இருக்கும் போது நான் தாவணி கட்டிக்க ஆரம்பிச்சேன்.

எல்லாத்துலயும் நான் கொஞ்சம் ஃபாஸ்டா நகர்ந்து போயிட்டு இருந்தேன். இதுக்கு காரணம் என் உடம்புல ஒரு உறுப்பு வயசுக்கு மீறிய வளர்ச்சி அடைந்சிருந்தது…

ஒரு சந்தேகம்!

ஒரு சந்தேகம்!
நான் வயசுக்கு வந்த பிறகு வந்த சந்தேகம் தான் இது. குழந்தைக்கு பால் கொடுக்குற ஒரு உறுப்ப யார் முதல்ல கவர்ச்சி பொருளா பார்க்க ஆரம்பிச்சது. அவங்க கண்ண நோண்டி இருந்தா. இன்னிக்கி சமூகத்துல இதுவொரு பிரச்சனையா இருந்திருக்காது. நானும் என் வாழ்க்கையோட அந்தந்த பருவத்த மத்த பொண்ணுங்க மாதிரி நிம்மதியா வாழ்ந்திருப்பேன்.

தொல்லை!

தொல்லை!
11 வயசுல இருந்து இந்த தொல்லை ஆரம்பிச்சது. அக்கா வயசுக்கு வந்தப்ப… அவளைவிட நான் தான் பெரிய பொண்ணு மாதிரி இருக்கேன்னு பேசுனாங்க. இவள முதல்ல வீட்டுக்குள்ள உட்காரவை, அப்பறமா பெரியவள குடிசைக்குள்ள உட்கார வைக்கலாம்னு எங்க அத்தை சொன்னதுக்கான அர்த்தம் அந்த வயசுல எனக்கு புரியல. புரிஞ்ச வயசுல நெஞ்சு முழுக்க எரிச்சல் மட்டும் தான் நெறஞ்சு இருந்துச்சு.

பசங்க!

பசங்க!
எங்க தெருவுல பசங்க, பொண்ணுங்க எல்லாரும் 1:1 ரேஷியோவுல இருந்தாங்க. அதனால, விளையாடுறது, ஸ்கூலுக்கு போறதுன்னு எல்லாமே ஒண்ணா தான் போவோம், வருவோம். ஆனா, இந்த ஒரு காரணத்தால நான் மட்டும் அப்பா கூட தனியா ஸ்கூலுக்கு போயிட்டு வர ஆரம்பிச்சேன்.

உத்து பார்த்தாங்க!

உத்து பார்த்தாங்க!
நான் அவங்க கூடயே இருந்து, விளையாடிட்டு வந்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இருக்கல. என்ன அந்த கூட்டத்துல இருந்து ஒதுக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் தான், அவங்க கண்ணனுக்கு நான் தனி ஒரு ஆளா தென்பட ஆரம்பிச்சேன். அவங்க என்கிட்டே என்ன பிரச்சனைன்னு உத்து பார்க்க ஆரம்பிச்சாங்க.

மூடி மறைக்கணும்!

மூடி மறைக்கணும்!
13 வயசு பொண்ணுக்கு என்ன தெரியும். நல்லா படிக்கணும், ஒழுங்கா இருக்கணும். என் வாழ்க்கையில தூங்கி எழுந்திருக்கிறதுல இருந்து மறுபடியும் படுத்து தூங்குற வரைக்கும் எப்பவும் மூடி மறைச்சுக்கணும். என் அம்மாவோட கண்ணு தான் என் மேல இருக்குற சிசிடிவி கேமரா. யாராச்சும் பார்த்துடுவாங்களானு எப்பவுமே ஒரு கண்ணு வெச்சுட்டே இருப்பாங்க.

கடைவீதி, கோவில்னு எங்க போனாலும், யாராச்சும் பசங்க என் பக்கம் திரும்பினா.. உடனே… ஒழுங்கா டிரஸ் பண்ணு.. பார் அவன் உண்ண தான் பாக்குறான்னு கொக்கரிப்பாங்க.

இறுக்கமான வாழ்க்கை!

இறுக்கமான வாழ்க்கை!
ஒவ்வொரு வயசு ஏறும் போதும், என் வாழ்க்கை இறுக்கமா மாற ஆரம்பிச்சது. வளர்ச்சிய தடுக்க முடியல. அதனால இறுக்கமான உள்ளாடை போட்டுக்க சொல்லி அம்மா உத்தரவு. டைட்டா ஒரு ஷர்ட் இல்ல ஜீன்ஸ் போட்டு உங்களால நாள் முழுக்க நடமாட முடியுமா? ஸ்லிம் ஃபிட்ங்கிறது வேற, சதைய இறுக்கி பிடிச்ச மாதிரியானதுங்கிறது வேற…

டாக்டர்!

டாக்டர்!
சீரான இரத்த ஓட்டம் இருக்காது. அடிக்கடி மூச்சு திணறல் மாதிரி ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்படும். ஏன் நான் இதனால மயக்கமான மாதிரி கூட ஆயிருக்கேன். இதுக்கெல்லாம் என்ன காரணம்னு, ஒருமுறை ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணப்ப டாக்டர் சொல்லி தான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பவும் என்னால தளர்வான வாழ்க்கைய வாழ முடியல.

சுமை!

சுமை!
இவள வெச்சுட்டு என்ன தான் பண்றது. பொத்தி, பொத்தி வளர்க்கவா முடியும். முதல்ல 20 வயசான உடனே எவன் கிட்டயாச்சும் தாட்டி விட்டுடனும்னு என் காதுப்பட, என் அம்மாவே பேசும் போது. உள்ளுக்குள்ள ஒரு வலி. பேசாம அறுத்து எறிஞ்சிடுலாமான்னு தோணும். நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேன். எனக்கு ஏன் இப்படி ஒரு பிரச்சனைன்னு என்னையே யோசிக்க வெச்சாங்க. என்னையே என்ன வெறுக்க வெச்சாங்க.

ஏன்?

ஏன்?
நாய், ஆடு, மாடு பால் கொடுக்குறத நாம உத்து பார்கிறது இல்ல. நடு ரோட்டுல அதுப்பாட்டுக்கு தன் குட்டிகளுக்கு பால் கொடுத்துட்டு இருக்கும். இதுவே ஒரு பொண்ணு, தன்னோட குழந்தைக்கு மறைவா வெச்சு பால் கொடுத்தா கூட, அவ மேல சுத்தி இருக்க சிலரோட கண்ணு நோட்டத்த விடும். இதெல்லாம் ஏன்? ஒரு நாய், ஆடு, மாட்டுக்கு இருக்குற சுதந்திரம் கூட பொண்ணுகளுக்கு இல்லையா? நீங்க பால் குடிச்ச அதே உறுப்பு தான் அது. வேற ஒன்னும் மாற்றம் இல்லையே? உங்க பிள்ளைங்க பொண்டாட்டி மார்ல பால் குடிச்சாலும் இப்படி தான் வெச்ச கண்ணு எடுக்காம பார்ப்பீங்களான்னு எனக்குள்ள கொஞ்சம் எக்ஸ்ட்ரா கோபம் வெளிப்படும்.

பயம்!

பயம்!
சும்மாவே கல்யாணத்துக்கு அப்பறமா, குழந்தை பிறந்துட்டா பால் சுரக்குறதுனால மார்பு பெரிசாயிடும் சொல்லுவாங்க. எனக்கு ஏற்கனவே இது ஒரு பிரச்சனை. இதுல அதுவேறன்னா என்ன ஆகுமோன்னு எனக்குள்ள அதிகமா பயம். ஒரு பொண்ணு இத எல்லாம் நினைச்சா பயப்படும்? நான் பயப்படுவேன், பயப்பட்டேன்.

கல்யாணம் ஆகுற வரைக்கும் என்னால நார்மலான லைப் லீட் பண்ண முடியல.

தவிர்ப்பு!

தவிர்ப்பு!
சில வரன் என்னோட இந்த விஷயத்த வெச்சு.. இதுவொரு பிரச்சனைய சொல்லி தவிர்த்ததா ப்ரோக்கர்ங்க சொல்லிட்டு போனாங்க. உள் ரூம்ல உட்கார்ந்துட்டு இருந்தாலும் அதெல்லாம் என் காதுல விழுகாம இல்ல.

எனக்குன்னு ஒருத்தன் பிறந்திருப்பான். அவன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டு நகர்ந்துட்டேன். ஆனா, அம்மா தான் இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு சொல்லி கொஞ்ச நாள் அழுதுட்டே இருந்தாங்க.

ஒருவேளை சின்ன வயசுல இருந்து அம்மா, இதனால என் கல்யாணம் பாதிக்கப்படும்னு நெனச்சு தான் அதிகமா வருத்தப்பட்டாங்களோனு அப்ப தான் எனக்குள்ள ஒரு எண்ணம் எழுந்துச்சு.

என்னவர்!

என்னவர்!
எனக்குன்னு பிறந்த அந்த ஒருத்தர் ரொம்ப சீக்கிரமா வந்தார். பையன் கொஞ்சம் குண்டா இருக்கான். வேற மாப்பிளை பார்க்கலாம்னு அம்மா, அப்பா சொன்னாங்க. பரவாயில்ல, அத நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்லி அதே மாப்பிளைக்கு ஒகே சொல்லிட்டேன்.

அவருக்கும் என்ன மாதியே தான் மரபணு சார்ந்த பிரச்சனை. பெரிசா சாப்பிடாட்டியும் கூட உடல் எடை குறைஞ்ச பாடில்ல. அது எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. இப்போ! ஒரு பையன், வீடு, கார்னு நாங்க நல்ல நிலைமையில சந்தோஷமா தான் இருக்கோம்.

ஒன்னே ஒன்னு...

ஒன்னே ஒன்னு…
ஆனாலும், இப்பவும் என் கல்யாணத்துக்கு முந்தைய அந்த நாட்கள நெனைச்சா மனசுக்குள்ள ஒரு மாதிரியனா உணர்வு. என்ன மாதிரியான பொண்ணுங்க நிறையா பேர் இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்லிக்க விரும்புறது ஒன்னே ஒன்னு தான்… இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. வாழ்க்கையில நாம கடந்து வர வேண்டிய ரொம்ப பெரிய பிரச்சனைகள் எத்தனயோ இருக்கு. இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதிங்க. உங்க வாழ்க்கை நீங்க எதிர்பாக்குறத விட ரொம்ப நல்லா அமையும்.