கடற்கரை மணலில் உல்லாசம்..! இறுதியில் கொலை செய்து உடலை மணலில் மூடிச் சென்ற கொடூரம்!

814

சென்னையில் உள்ள மெரினா கடர்கரையில் பெண் ஒருவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு மணலால் மூடி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தினமும் அரங்கேறும் அவலங்கள் ஏராளம். காதல் என்ற பெயரில் நிகழும் ஆபாசங்களுக் அசிங்கங்களும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் அரைகுறையாக மூடப்பட்டு கிடந்துள்ளது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் பொலிசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.

உடலெங்கும் காயங்கள், முகம் அதிகமாக தாக்கப்பட்டு காயங்களிலிருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் அவர் யார்? என்ன? என்ற விவரம் தெரியவில்லை.

இந்நிலையில், குறித்த பெண்ணின் செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.

மேலும், குறித்த பெண்ணின் அருகில் நான்கு ஜோடி செருப்புகள் கிடந்தன. கூடவே மதுபாட்டில்களும் அந்த பெண்ணின் செல்போனும் இருந்துள்ளது.

இதனை வைத்து, இரவில் உல்லாசமாக இருக்க கடற்கரைக்கு அந்த பெண்ணை யாரேனும் தனியாக அழைத்து வந்திருக்கலாம் என்றும் ஒன்றாக மது அருந்திய இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அதனால் அந்த பெண்ணை நபர் கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கித்து விசாரணை செய்து வருகின்றனர்.