பிணத்துடன் 9 மாதம் வசித்த கள்ளக்காதலன்: இளம்பெண் சடலம் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

609

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணிடம் சடலம் தொடர்பாக, தலைமறைவாக இருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பேழைக்குள் அடைக்கப்பட்டிருந்தவாறு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், தற்போது தலைமறைவாக இருந்த பெண்ணின் கள்ளகாதலன் செந்திலை கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவம் குறித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஒரு வருடத்திற்கு முன்பே கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதில், 5 வருடங்களுக்கு முன்பு கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்த லதா, மில்லில் வேலை செய்துவந்த செந்தில் என்பருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இருவருக்கும் 4 வயதில் நித்திகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

மது பழக்கத்திற்கு அடிமையாகிருந்த செந்திலால், லதா மனமுடைந்து சண்டையிட்டுள்ளார். “இப்படியே இருந்தால் நான் என்னுடைய முதல் கணவருடன் சென்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் கட்டையை கொண்டு லதாவின் தலையில் அடித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே லதா உயிரிழந்ததால், அங்கிருந்த பேழைக்குள் அவருடைய உடலை போட்டு வைத்ததோடு, துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக மணலை அடைத்து சரிசெய்துள்ளார்.

இதற்கிடையில் மகளை தாயின் வீட்டில் ஒப்படைத்த செந்தில், “லதா கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள். அவளை சமாதானம் செய்த பிறகு குழந்தையை அழைத்து செல்கிறேன்” என கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.

பின்னர் வீட்டில் 9 மாதங்களாக பிணத்துடன் வசித்து வந்த செந்தில், வேறு ஒரு இடத்திலும் வாடகைக்கு வீடு எடுத்து 3 மாதங்களாக தங்கியுள்ளார்.

இதற்கிடையில் தான் வீடு பூட்டியே கிடப்பதை பார்த்த, பிரகாஷ் சுத்தம் செய்யும் போது உடலை கண்டறிந்துள்ளார். இந்த செய்தி வெளியில் தெரிந்ததும் தான் செந்தில் தலைமறைவாகியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.