வேகமாக தொப்பையைக் குறைக்க தினமும் 4 பேரீட்சை… எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா?

953

பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது.

பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம். பேரிச்சைம் பழம் எப்படி உங்கள் உடல் எடை குறைக்க உதவும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

பேரிச்சைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:

பேரிச்சை ஆசியா, இந்தியா, அரேபிய நாடுகள், பங்களாதேஷ், பாகிஸ்தான், மத்திய கிழக்கு பகுதியில் விளைகிறது. இதில் முக்கியமாக ஃப்ரக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ், ஆகியவைகள் இருக்கின்றன. அதன் சத்துக்கள் தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள்.

அதிலுள்ள சத்துக்கள்:

பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் 44 %, நார்ச்சத்து 11.5%, புரதம் 5.6 %, கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன. இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இத்தனை சத்துக்கள் கொண்ட பேரிச்சைப்பழம் சுவை மிகுந்தது மட்டுமல்ல. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. அதற்காக அளவு மீறி சாப்பிட வேண்டாம். உங்கள் பற்கள் பத்திரம். அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக வாய் கொப்பளித்து விடுங்கள்.

4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்?

பேரிச்சையை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் தெரியுமா? வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனை பின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள். உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது. தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.

தேவையானவை:
  • பேரிட்சை -2
  • பசும் பால்- 1 கப்
  • மஞ்சள் – 1 சிட்டிகை
  • தேன் – 1 ஸ்பூன்.
பயன்படுத்தும் முறை :

ரொம்ப ஈஸிங்க. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும். இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.

பின்பற்றும் முறை :
  • காலை – 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால்
  • மதியம் – பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம்,
  • மாலை – தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட்
  • இரவு – 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அத்னுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன்.

இந்த டயட் எளிதான முறைதான். பெரிதாக செலவுமில்லை. வீட்டிலேயே பின்பற்றலாம். இதற்காக மெனெக்கெட எல்லாம் வேண்டியதில்லை. சரியாக 1 மாதம் பின்பற்றிப் பாருங்கள். பேலியோ டயட், வேகன் டயட் எல்லாம் தேவையே இல்லை. நீங்களே வியக்கும் அளவிற்கு தொப்பை குறையும்.