அண்ணன், தந்தை கொலை… தாய், தங்கை கூட்டு துஸ்பிரயோகம்: குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

412

குஜராத் மாநிலத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராய்பரேலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் முதலமைச்சரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்த அதிகாரிகள் சிலர் உடனடியாக விரைந்து சென்று, மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்ற பெண் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், என்னுடைய சகோதரன் கடந்த ஆண்டு பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளால் கொலை செய்யப்பட்டான்.

இதுபற்றி பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்தனர். அப்போது நீதி கேட்டு போராடிய என்னுடைய சகோதரியை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தனர்.

அதனை தொடர்ந்து என்னுடைய தாயையும் கூட்டு துஸ்பிரயோகம் செய்து, உயிருடன் எரித்து கொன்றனர். பின்னர் என்னுடைய தந்தையும் கொலை செய்தனர்.

இதனை எதிர்த்து கேட்டதற்காக என்னுடைய சகோதரன் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

இதனால் நானும் என்னுடைய குழந்தைகளும் சாப்பிட உணவு கூட இல்லாமல் சிரமப்படுகிறோம். என்னுடைய குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியில், பாஜக கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

நான் தற்போது வழக்கினை சிபிஐக்கு மாற்றக்கோரி போராடி வருவதால் எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. இதை பற்றி தெரிவிக்க முதலமைச்சரை சந்திக்க வந்தால், எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி அபய் குமார் மிஸ்ரா கூறுகையில், தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கும், அவருடைய குழந்தைக்கும் பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.