தீபாவளிக்கு ஆடைகளை தைக்க முடியாததால் பெண் எடுத்த விபரீத முடிவு

418

தீபாவளிக்கு ஆடைகளை தைத்து கொடுக்க முடியாத காரணத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக பத்மினி என்பவர், சொந்தமாக பெண்கள் தையல் நிலையம் நடத்தி வருகிறார்.

இவர் தைத்து தரும் துணிகள் நன்றாக இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பலர் இவரிடம் தங்கள் துணிகளை கொடுத்து வந்துள்ளனர்.

தீபாவளியையொட்டி, கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக அவர் துணி தைத்து வந்துள்ளார். எனினும் சிலருடைய துணிகளை தைத்து தர முடியாத நிலை ஏற்பட்டதால் வருத்தமடைந்த பத்மினி, சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த பொலிசார், பத்மினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.