189 பேர் பலியான விமான விபத்தை விளக்கும் காணொளி இதோ…

693

இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர்லைன்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி புறப்பட்டுச் சென்ற இந்த விமானம் புறப்பட்ட 13 நிமிடம் 23 நொடிகளில் கடலில் விழுந்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய விமானி கேப்டன் பவ்வி சுனேஜா உள்ளிட்ட மற்றொரு விமானியும் அடங்குவர்.

தற்போது விபத்தினை விளக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. விமானம் விபத்திற்கு முன்பு 1016 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எதனால் இவ்வளவு வேகத்தில் விமானம் சென்றது மற்றும் விபத்திற்கு இதுதான் காரணமா என்று அதிகாரிகள் தொடர்ந்து கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேசியாவில் சில தினங்களுக்கு முன்பு 189 பேர் பலியான விமான விபத்தை விளக்கம் வீடியோ: #LIONAIR #Accident விமானம் விபத்திற்கு முன்பு 1016 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது என்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. எதனால் இவ்வளவு வேகத்தில் விமானம் சென்றது மற்றும் விபத்திற்கு இதுதான் காரணமா என்று அதிகாரிகள் தொடர்ந்து கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து வருகின்றனர்

Posted by தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் ஷேர் பண்ணுங்க on Tuesday, November 6, 2018