ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் அதிரடி திருப்பம்

571

வேலூர் அருகே ஏரியில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் அதிரடி திருப்பமாக வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

வேலூர் சதுப்பேரி பகுதியில் உள்ள ஏரியில் நேற்று இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் தென்பட்டது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கீழ்மொணவூர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் என்பவரது மனைவி அனிதா தான் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

பின்னர் கதிரேசனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கதிரேசன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அனிதாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் அனிதாவிற்கும் பைனான்சியர் அஜித்குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதனை தெரிந்துகொண்ட கதிரேசன் மனைவியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த தீபாவளியன்றும் அனிதா தன்னுடைய காதலனிடம் போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த கதிரேசன் செல்போனை பறித்து சண்டையிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அனிதாவின் வீட்டிற்கு சென்ற அஜித்குமார், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் காதலியை ஏற்றிக்கொண்டு வெளியில் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தலைமறைவாகியுள்ள அஜித்குமாரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.