சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கைது விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

336

சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27-ஆம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி ஆளும் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மீது படப்பிரச்சனை தொடர்பாக பொலிசார் வழக்கப்பதிவு செய்ய்தனர்.

இதையடுத்து முன் ஜாமீர் கோரி உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸை வரும் 27 வரை கைது செய்ய தடை விதித்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.