சர்கார் படத்தில் இந்த காட்சியை தான் நீக்க வேண்டுமாம்… ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்ட சர்கார் திரைப்படம்?

398

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று பலத்த எதிர்ப்பையும் மீறி வெளிவந்த படம் தான் சர்கார்.

இப்படம் முழுக்க முழுக்க அரசியலைப் பற்றி இருந்து வருவதாகவும், இதில் வரும் காட்சிகளில் ஆளும் கட்சியினை குற்றம் சாட்டி இருப்பதாகவும் கூறி அதிமுக-வினர் நேற்று திரையரங்கில் பேனர்களை கிழித்து பிரச்சினையில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களின் எதிர்ப்புக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர் என அனைத்தும் ஒரு காட்சியில் தீயில் கொளுத்துவது போன்று அமைந்துள்ளதாக கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது சர்கார் படத்தில் ஒரு அரசியல் காட்சி வெளியாகி இக்காட்சியினால் தான் அதிமுக-வினர் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் இதுதான் நீக்கப்பட வேண்டிய காட்சி என்றும் இணையத்தில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கிய பின்பு திரையிடப்படும் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் கூறியுள்ளார். இதனால் திரைக்கு வந்தும் வராமல் தவித்து வருகிறது சர்கார் படம்..

இந்த காட்சியை தான் நீக்க வேண்டுமாம் அடிமை அ.தி.மு.க.கோரிக்கை!

Posted by தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் ஷேர் பண்ணுங்க on Thursday, November 8, 2018