சர்கார் பட பிரச்சனையால் நடிகர் விஜய்யின் அதிரடி முடிவு: அனுமதிப்பாரா முதல்வர்?

735

திரைப்பட நடிகரான விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. அரசியலில் இறங்கப்போவதை விஜய், சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார்.

இதனால் சர்கார் படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போன்றே படத்தில் அரசியல் காட்சிகள் இருந்தன.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், இப்படத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவது போன்று காட்சி இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனால் சர்கார் பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டதால் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்காக படம் மறு தணிக்கை செய்யப்படுகிறது. படம் திரையிட்ட தியேட்டர்களில் அதிமுகவினரின் போராட்டமும் தொடந்து நடைபெற்று வருகிறது.

சர்கார் சர்ச்சையில் நடிகர் விஜய்யை எச்சரித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம் என்று சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகரான விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் தலைவா பட விவகாரத்தின் போது, விஜய் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக கொடநாட்டிற்கு சென்றிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.