3 மனைவிகள்….9 குழந்தைகள்: இன்னும் அழகான மனைவிகள் 50 குழந்தைகள் வேண்டுமென பேட்டி கொடுத்த நபர்

296

ரஷ்யாவை சேர்ந்த Ivan Sukhov என்ற நபர் தனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் அழகான மனைவி வேண்டும் என பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும், இவர் அளித்துள்ள பேட்டியில், பெண் பார்ப்பதற்கு ஒல்லியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும்.

எனக்கு Anna, Natalia மற்றும் Madina ஆகிய 3 மனைவிகள் உள்ளனர். 9 குழந்தைகள் உள்ள நிலையில் Madina தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இதில், Natalia வை மட்டுமே நான் முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். மற்ற இருவர் அவர்களது விருப்பப்படி என்னுடன் இணைந்து வாழ்கிறார்கள் என கூறியுள்ளார்.

இதுகுறித்து மனைவி Natalia கூறியதாவது, நான் செவிலியராக பணியாற்ற வருகிறேன், ஆரம்பத்தில் அவரது பலதார திருமணமுறை எனக்கு பிடிக்கவில்லை.

ஆனால், நாட்கள் சென்றபின்னர் தான் எனக்கு தெரியவந்தது, அவருக்கு அதிக சொந்தங்கள் தன்னுடன் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறார், இதனால் இன்னும் அதிக மனைவிகள் வேண்டும் மற்றும் 50 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார் என கூறியுள்ளார்.