இந்தியாவுக்கு ஓடிவந்த வெளிநாட்டை சேர்ந்த திருமணமான பெண்: இந்தியருடன் இரண்டாம் திருமணம்

232

வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு வந்து வேறு நபரை திருமணம் செய்து ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

மோனிகா ராதா (45) என்ற வங்கதேசத்தை சேர்ந்த பெண் திபஷீஸ் பரூ என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவரும் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி மோனிகா காணாமல் போனார்.

இது குறித்து திபாஷீஸ் பொலிசில் புகார் அளித்த நிலையில் கடத்தல் வழக்காக இதை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மோனிகா கடத்தப்படவில்லை என்பதும் இந்தியாவை சேர்ந்த கமலேஷ்குமார் என்பவருடன் விருப்பப்பட்டு அவர் ஓடி போனதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்தியா வந்த வங்கதேச பொலிசார் கொல்கத்தாவில் கமலேஷ்குமாரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த மோனிகாவை பிடித்தனர்.

இருவரும் மத சம்பிரதாயபடி திருமணம் செய்தாலும் முறையாக பதிவு திருமணம் செய்யாதது தெரியவந்தது.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் மோனிகா தனது பெயரை அனாமிகா என மாற்றி கொண்டு, ஆவணங்களில் கமலேஷ்குமார் தான் தனது கணவர் என பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கமலேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

மோனிகாவை பொலிசார் வங்கதேசத்துக்கு அழைத்து சென்றனர்.

சட்டவிரோதமாக மோனிகா இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.