ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை வீடு திரும்பமாட்டேன்: கணவர் முடிவு

268

ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள குடும்பத்தார் ஒப்புக்கொள்ளும் வரை நான் வீடு திரும்பமாட்டேன் என பீகார் முன்னாள் முதல்வரின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், பிரிந்து வாழ விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், விவாகரத்து கோரி நான் மனுத்தாக்கல் செய்துள்ளது உண்மைதான். துயரத்துடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் எளிமையான வாழ்க்கையை விரும்புகிறேன், ஐஸ்வர்யா நகரத்து வாழ்க்கையை விரும்புகிறாள் என தேஜ் பிரதாப் பேட்டியளித்தார்.

ஆனால் அவரின் முடிவுக்கு தாய் ராப்ரி தேவி உட்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தையும் வெளியிடவில்லை. தீபாவளிக்கும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், ஹரித்துவாரில் ஒரு ஆசிரமத்தில் தான் தங்கி இருப்பதாகவும் தனக்கு விவாகரத்து பெற்றுத்தர குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளும் வரை வீடு திரும்ப வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.