குழந்தையின் கண்முன் தூக்கில் தொங்கிய தாய்.. ரயில்முன் பாய்ந்த தந்தை..! அடுத்தடுத்து நடந்த சோகம்

333

ஐதராபாத் மாநிலத்தில் அடுத்தடுத்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால், 3 வயது குழந்தை அனாதையாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலம் குகத்பள்ளி காலனி பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து வருபவர் பபையா சௌதிரி.

பபையா மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீஷா கச்சிபவ்லி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.

பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்த நிலத்தை விற்குமாறு, பபையா தன்னுடைய மனைவியை வற்புறுத்தியுள்ளார். அந்த நிலம் தன்னுடைய “திருமணத்தின் போது தந்தை கொடுத்தார். அது இனிமேல் மகளுக்கு சொந்தம்” எனக்கூறி ஸ்ரீஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீஷா, கணவர் வெளியில் சென்ற நேரம் பார்த்து தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இதற்கிடையில் தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்திருந்த ஸ்ரீஷாவின் சகோதரன், வெளியில் நின்று போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் செல்போனை எடுக்காததால், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்துள்ளது. ஸ்ரீஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உறவினர்கள் மற்றும் பபையாவிற்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஸ்ரீஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மனைவி இறந்த தூக்கம் தாளாமல் கணவனும் அடுத்து சில மணி நேரங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.