தம்பி மனைவியுடன் ஓடி போன அண்ணன்: நேர்ந்த சம்பவத்தின் பின்னணி

750

தமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும், பெண்ணும் குழந்தையுடன் இருந்தனர்

அப்போது திடீரென ஆணும், பெண்ணும் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து ஓட்டுனர் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டி சென்ற நிலையில் அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதித்ததில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்த 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும், இறந்தவர்களின் பெயர் மணிகண்டன் (29) மற்றும் இலக்கியா (21) என்பதும் தெரிந்தது.

அதாவது, மணிகண்டன், அவருடைய தம்பி நயினார் (24) ஆகிய இருவரும் கொத்தனார்கள்

மணிகண்டனுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நயினாருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியாவுடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், இலக்கியாவுக்கு கணவர் நயினாரின் அண்ணன் மணிகண்டனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.

ஒருகட்டத்தில் இருவரும் ஓடிப்போய் தனிக்குடித்தனம் நடத்துவது என்று முடிவு செய்தனர். இதையடுத்து இலக்கியா தனது குழந்தையுடன் மணிகண்டனுடன் சென்றுள்ளார்.

இது குறித்து அறிந்த நயினார் பொலிசில் புகார் கொடுத்தார்.

பொலிசார் தங்களை எப்படியும் பிடித்து விடுவார்கள் என்று கருதிய இருவரும் பயத்தின் காரணமாக பேருந்தில் செல்லும் போது விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

குழந்தைக்கு விஷம் கொடுக்காததால் அது உயிர் தப்பியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.