கண் பார்வையில்லாத வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த ஆசிய இளைஞர்: அழகான காதல் கதை

230

அமெரிக்காவை சேர்ந்த கண் பார்வையற்ற இளம் பெண்ணை பாகிஸ்தானை சேர்ந்த பார்வைக் குறைபாடு உள்ள இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பார்வை குறைபாடு உள்ளவர்கள் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் முஜிபர் ரஹ்மான்.

இவருக்கு பேஸ்புக் மூலம் கண் பார்வையில்லாத அமெரிக்க பெண்ணான பிரிட்னி மோன்கோமரி என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

நட்பானது மெல்ல காதலாக மாறிய நிலையில் பிரிட்னியும், ரஹ்மானும் உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கினர்.

இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்னி இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வந்த பிரிட்னி அங்கு தனது காதலன் ரஹ்மானை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து பாகிஸ்தான் கண் பார்வையற்றோர் கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த முறை கிரிக்கெட் போட்டியை வெல்வதற்கு பதிலாக, ரஹ்மான் அமெரிக்க பெண்ணின் மனதை வென்றுள்ளார் என கூறியுள்ளார்.