அவருடன் இனி இல்லை… முதல் பிரசவத்திற்கு பின்னர் முடிவெடுத்த மனைவி: அதிர்ச்சி காரணம்

497

இந்திய மாநிலம் கேரளாவில் கர்ப்பிணி மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வேண்டாம் என நிர்பந்தித்த கணவனை பிரிய மனைவி முடிவெடுத்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரண மாநிலம் திருவனந்தபுரத்தில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிதா என்ற சமூக ஆர்வலர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த அவரது நெருங்கிய தோழி, பேச வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

சனிதா அந்த குடியிருப்புக்குள் செல்லும்போது பிறந்த பிஞ்சு குழந்தையுடன் படுத்திருந்த அவர் கண்விழித்து, 5 வருடங்கள் காத்திருந்து கிடைத்த கண்மணி என குழந்தையை காட்டுவார் என்றால், அவர் முதலில் கேட்ட கேள்வி, வேலை ஏதும் கிடைக்குமா என்பது தான்.

பொறியியல் பட்டதாரியான அவர், காலம் கடந்து ஏன் இப்போது வேலை தேடுகிறார் என்ற எனது முகபாவம் பார்த்து, அவரே தனது கதையை கூறத் தொடங்கியுள்ளார்.

அந்த மனிதருடன் இனி போவதாக இல்லை என துவங்கிய அவர், கர்ப்பிணியாது முதலே புறமுதுகு வலி இருந்ததாக கூறிய அவர், பிரசவ நாள் நெருங்கிய நிலையில் அந்த வலி அதிகரித்தது.

5 மணி நேரம் வலியால் மருத்துவமனையில் துடித்த தம்மை கண்டுகொள்ளாமல், அறிவை சிகிச்சை வேண்டாம், நார்மல் டெலிவரி போதும் என கணவர் அடம்பிடித்துள்ளார்.

அறுவை சிகிச்சையால் பிள்ளை பெற்றெடுப்பது மத நம்பிக்கைக்கு எதிரானது என கூறிய அவர், தமது மனைவி கடும் அவதிப்படுவதை கண்டும் காணாது போன்று நடித்துள்ளார்.

பல முறை மருத்துவர்களே கணவரின் அனுமதிக்காக காத்திருந்துள்ளனர். இருப்பினும் அவர் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்மணி பிரசவித்ததும், 5 ஆண்டுகள் காத்திருந்த தமது குழந்தையை காண அவர் விரும்பவில்லை.

மாறாக மூச்சு நின்று விடாதா என்றே ஆசித்துள்ளார். காரணம், கணவர் என கூறும் அந்த நபரை மீண்டும் சந்திக்க தாம் விரும்பவில்லை என்பதே என்றார்.

மருத்துவமனை அறைக்கு அவரை கொண்டுவந்ததும், தமது கணவரிடம் அவர் தமது முடிவை தெரிவித்துள்ளார். இனி ஒரு வாழ்க்கை உங்களுடன் இல்லை என்று.

இதனையடுத்து குழந்தை மீது தமக்கிருக்கும் உரிமை குறித்து அவர் வாதிட்டுள்ளார். குழந்தை என்றால் பெண்கள் மனம் மாறுவார்கள் என கருதியிருக்கலாம்.

ஆனால், உங்கள் குழந்தையை நீங்களே வளர்த்துங்கள் என இவரும் கூறியுள்ளார். இதனையடுத்து ஆலோசனையில் ஏற்பட்ட கணவர் குடும்பத்தினர் சில வருடங்கள் தாயுடன் வளரட்டும் என ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போது திருமண முறிவை நோக்கி அவளும் கணவரின் குடும்பத்தினரும் சட்டப்பூர்வமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.