முறிந்த எலும்புகளை விரைவில் ஒட்ட வைக்கும் பிரண்டை!

291

பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர, பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.

பிரண்டையின் சமஸ்கிருத பெயர், அஸ்திசம்ஹரகா. இதன் பொருள் எலும்புகளை பிணைப்பது என்பதாகும். பிரண்டை சாற்றை தினமும் இரண்டு முறை 20 மிலி பருகுவதால் எலும்பு முறிவிற்கான சிகிச்சை விகிதத்தை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

மேலும் எலும்புத் தாது அடர்த்தி குறைவு, எலும்புத் துளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் எலும்பு வலிமையை மறுசீரமைக்க உதவுகிறது. பிரண்டை தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெளிப்புறம் தடவுவதாலும், மேலே கூறிய எலும்பு வலிமை அதிகரிக்கப்படுகிறது.

பிரண்டையின் இலைகள் மற்றும் தண்டுகள் எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.

எலும்பு முறிவு
இது எலும்பு முறிவிற்குரிய நுண்ணுயிர் செயல்முறையை முடுக்கி எலும்பு முறிவு சிகிச்சைமுறைக்கு உதவுகிறது. இது எலும்பு மறுசீரமைப்பு விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் எலும்புக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து அளிப்பை மேம்படுத்துகிறது. இது எலும்பு திசு உட்செலுத்துதல் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றைக் காப்பதுடன், எலும்பு உயிரணு பெருக்கத்தையும் ஊக்குவிக்கிறது.

இந்த சிகிச்சைக்கு ஆயுர்வேதத்தில் லக்ஷாதி குகுலு என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தின் முக்கிய மூலப்பொருள் பிரண்டை. அபா குகுலு மற்றும் காந்த தைலத்துடன் இணைத்து இதனை சிகிச்சைக்கு பயன்படுத்துவார்கள். பிரண்டையின் புதிதாக எடுக்கப்பட்ட சாற்றில் எலும்பு முறிவை குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள், இந்த பிரண்டை சாற்றை பசும்பால் அல்லது பசு நெய்யுடன் கலந்து தினமும் இரண்டு முறை 20மிலி அளவு கொடுத்து எலும்பு முறிவிலிருந்து வேகமான நிவாரணத்தை பெற உதவுகின்றனர். புதிய மூலிகை கிடைக்கவில்லை என்றால், அதன் நீர் கலந்த சாறு அல்லது தூள் பயன்படுத்தப்படலாம்.

பிரண்டையின் இலை மற்றும் தண்டில் தயாரிக்கப்பட்ட விழுதை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தடவுவதால் விரைந்த நிவாரணம் கிடைக்கிறது. எலும்பு முறிவிற்கான சிகிச்சைகள் இல்லாத காலகட்டத்தில் இந்த முறை மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த காலகட்டதில், எலும்பு சீரமைக்கபட்டவுடன், இந்த விழுதை முறிவு ஏற்பட்ட பகுதியில் தடவி, சுத்தமான துணியால் மூடி, ஒரு குச்சி கொண்டு கட்டி வைத்து விடுவார்கள்.

பிரண்டையின் இதர மருத்துவ பலன்கள்

உடல் பருமன்
பிரண்டையில் ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளதால், எடை குறைப்பு தன்மை இதில் அதிகம் உள்ளது. இது உடல் கொழுப்பை குறைத்து, ஒட்டுமொத்த கொழுப்பு தன்மையை மேம்படுத்துகிறது.

பிரண்டை வளர்சிதையை அதிகரித்து உடலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். இதனால் உடலில் உகந்த அளவு கொழுப்பு சேர்க்கப்பட்டு, எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும்.

இதனால் எலும்பின் எடையும் அதிகரிக்கும். இதனால் அடிவயிறு, இடுப்பு, பிட்டம், தொடை போன்ற இடத்தில் படியும் கொழுப்பு குறிப்பிட்ட அளவு குறைக்கிறது. பெரும்பலான சந்தர்ப்பங்களில், அங்குல இழப்பு மற்றும் வயிற்று கொழுப்பு குறைப்பு ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன.

மூட்டு வலி
பிரண்டையில் அயோடின் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் மூட்டுகளில் உண்டாகும் அழற்சி மற்றும் வலி குறையும். விளையாட்டு வீரர்களுக்கு கடின பயிற்சியால் உண்டாகும் வலியை குறைக்கவும் பிரண்டை உதவும்.

செரிமானம்
செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள், பிரண்டையின் இலைகளை துவையலாக அரைத்து அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் செரிமானம் சீராக நடைபெறும். மேலும், பிரண்டையின் தண்டுகளை தூளாக்கி அதனுடன், சம அளவு இஞ்சி தூள் சேர்த்து தயாரிக்கும் மருந்தானது, பசியின்மைக்கு தீர்வாக அமையும்.

கீல்வாதம்
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டையை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைப்பதுடன், அழற்சியையும் குறைக்கும். ஏனெனில், மூட்டு இயக்கத்தை மேம்படுத்த பிரண்டை ஒரு துணை மருந்தாகும்.

கிரந்தி நோய்
பிரண்டை தண்டை எரிந்துகொண்டிருக்கும் கரியில் சில நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு அதிலிருந்து எடுக்கப்படும் 20 மில்லி லிட்டர் சாறுடன், 20 மில்லி லிட்டர் நெய் சேர்க்க வேண்டும்.

அதனை உணவிற்கு பிறகு ஒரு நாளில் இரண்டு முறை என, தொடர்ந்து 7 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம், கிரந்த நோய் பாதிப்பு நீங்கும்.

பல் ஈறு
பிரண்டை சாற்றைக் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம், பல் ஈறு குருதிக் கசிவு மற்றும் பல் ஈறுகளில் உண்டான அழற்சி போன்றவை குறையும். பற்களில் படிந்திருக்கும் சீமை சுண்ணாம்பை சுத்தமாக்கும்.

மேலும், பிரண்டையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை காரணமாக பற்களில், நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.