18 வயது மாணவியின் இருதய ஆபரேசனுக்கு உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.

5873

இருதய நோயால் அவதிப்படும் ஏழை விவசாய கூலித் தொழிலாளியின் மகளான சிந்துவின் அறுவைச் சிகிச்சைக்கு உங்களால் ஆன உதவியை https://www.edudharma.com/campaigns/help-sindhu-get-heart-surgery இந்த இணையதளம் மூலம் செய்யலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி நைனியப்பன். இவரது ஒரே மகளான சிந்து தனது 13-வது வயதில் காய்ச்சல், சோர்வு போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் அவரை அப்பகுதியின் மருத்துவ முகாமில் பரிசோதிக்க பெற்றோர் அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இருதய குழாயில் அடைப்பு இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

18 வயது மாணவியின் இருதய ஆபரேசனுக்கு  உதவுங்கள்- விளம்பரச் செய்திதனது மகளின் நிலையால் துவண்டுபோன நைனியப்பன், தனக்கு வரும் சொற்ப வருமானத்தை வைத்து மகளை எப்படி காப்பாற்றப்போகிறோம் என மிகவும் மனமுடைந்தார்.

சிந்து எப்போதும், சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பாள். ஆனால், திடீரென அவளுக்கு ஏற்படும் மூச்சுதிணறல் காரணமாக அடுத்த கணமே சோர்வடைந்து விடுவாள் என அவரது தாயார் அஞ்சலா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிந்துவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. சுமார் 6 ஆண்டுகளாக சிந்து இருதய அடைப்பு நோயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் தனது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கைவிடாத சிந்து, தினமும் 48 கிலோமீட்டர் பயணித்து கல்லூரிக்கு சென்றார்.

தற்போது உடல்நிலை மோசமடைந்தாலும், தன்னை நினைத்து கவலைப்படும் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறி வருகிறார். இளம் வயதில் உயிருக்கு ஆபத்தான நோய் இருந்தும்கூட, சற்றும் மனம் தளராமல் தனது படிப்பை தொடர்ந்து பெற்றோரை அரவணைக்க விரும்பும் சிந்துவுக்கு அறுவை சிகிச்சை செய்ய 3 லட்ச ரூபாய் செலவு ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீங்கள் இந்த பெண்ணின் மறுவாழ்விற்கும், அவரது குடும்பத்தை சோகத்தில் இருந்து மீட்டெடுக்கவும் நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடையும் மிகுந்த உதவியாக இருக்கும். சிந்துவின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவ, https://www.edudharma.com/campaigns/help-sindhu-get-heart-surgery இந்த இணையதளம் மூலம் நன்கொடை செலுத்தலாம்.

மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021

+919600111639