189 உயிரை பறித்த விமான விபத்துக்கு அடுத்து இந்தோனேசியாவில் ஏற்பட்ட துயரம்: மண்ணில் உயிரோடு புதைந்த மாணவர்கள்

316

இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஓய்வு விடுதி மண்ணில் புதைந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த 7 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா வந்திருந்தனர்.

இங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் ஒரு விடுதியில் இவர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், இன்று அந்த பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி மண்ணுக்குள் புதைந்தது. தகவல் அறிந்து விரைந்துவந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் காயங்களுடன் 7 பேரை காப்பாற்றினர்.

பின்னர் மீதமுள்ள 7 பேரை காப்பாற்ற கடுமையான முயற்சியை எடுத்தார்கள்.

ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கி மூச்சுத்திணறி 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து ஏழு பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் கஷ்டப்பட்டு வெளியில் எடுத்தார்கள்.