தாய் வயது பெண்ணை தவறான ஆசைக்கு இணங்க அழைத்த இளைஞர்: பின்னர் நடந்தது இதுதான்

432

மஸாஜ் செண்டர் ஒன்றில் தாய் வயது பெண் ஒருவரை தனது ஆசையைத் தீர்க்குமாறு அழைத்த ஒரு இளைஞர், அந்த பெண் அதற்கு சம்மதிக்காததால் அவரைத் தாக்கியதோடு அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தையும் திருடிச்சென்ற வீடியோ வெளியாகியுள்லது.

அமெரிக்காவின் Flushing, Queens பகுதியில் அமைந்துள்ள மசாஜ் செண்டர் ஒன்றில் பாதங்களை மஸாஜ் செய்ய வந்த ஒரு இளைஞர் ஒரு கட்டத்தில் தனக்கு மஸாஜ் செய்த 55 வயது பெண்ணிடம் தனது பாலியல் ஆசையை தீர்க்கும்படி கேட்டிருக்கிறார்.

தனது ஆசையை நிறைவேற்றினால், அதிக பணம் தருவதாகவும் ஆசை காட்டியுள்ளார்.

அத்ற்கு அந்த பெண்மணி சம்மதிக்காமல் போகவே ஆத்திரமுற்ற அந்த இளைஞர் அந்த பெண்ணின் முகத்தில் குத்தியுள்ளார்.

பின்னர் அந்த மஸாஜ் செண்டரைச் சேர்ந்த இன்னொரு பெண்ணையும் தாக்கிய அந்த இளைஞர், பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.

அந்த பெண் மறுக்கவே அவரை ஒரு மூலையில் பிடித்துத் தள்ளிவிட்டு, அங்கிருந்த ஒரு சுத்தியலால் அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தையும் அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார் அந்த இளைஞர்.

CCTV கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் அந்த இளைஞரை பொலிசார் தேடி வருகின்றனர்.