தினமும் நைட் இத குடிச்சா தொப்பை வரவே வராது!

971

உடல் எடையை குறைக்க பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் பெயரே வாயில் நுழையாத டயட் முறைகளை எல்லாம் பின்பற்றுவதாய் சொல்வார்கள். ரிசல்ட் எப்படியென்றெல்லாம் தெரியாது. ஆனால் பிறரிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளவாவது அதை நாமும் பின்பற்றினால் என்ன என்ற எண்ணம் நமக்கு தோன்றிடும்.

டயட் இருப்பவர்களின் பெரும் பிரச்சனையான நேரம் இரவு நேரம் தான். அவர்கள் சொன்னபடி இரவு தொடர்ந்து அதே உணவை சாப்பிட முடியாது. சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு அப்படியே துங்கச் செல்வோம். சாதரண நபர்களுக்கும் இதே பிரச்சனை நடப்பதுண்டு. இரவு உணவு சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இருக்கிற இடைவேளி நேரத்தை நாம் எப்போதும் மனதில் கொள்வதேயில்லை.

தொல்லைகள் :

இதைத் தவிர உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை ,மன அழுத்தம் ஆகியவையும் வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்திடும். சிலருக்கு இயற்கையாகவே தாமதமான செரிமானத்தை கொடுக்கும் இடத்தில் நீங்கள் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டால் அதுவும் உங்களுக்கு பிரச்சனையாகவே முடியும்.

அறிகுறிகள் :

இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல்,வயிற்று வலி,ஒமட்டல் ஆகியவை ஏற்படக்கூடும்.சிலருக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கும் ஏற்படும். இரவு நேரத்தில் அதிகப்படியான உணவு உண்பதினால் இந்த சிக்கல்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்புண்டு.

இவற்றை தவிர்க்க இரவு சாப்பிடும் நேரத்தையும் தூங்கும் நேரத்தையும் சரியாக கடைபிடிக்க வேண்டும். அதோடு உங்களது கல்லீரலையும் அமைதியாக வைத்திருக்க வேண்டும்.

பானம் :

இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க தினமும் இரவில் இந்த பானத்தை குடியுங்கள். தேங்காய்ப்பால், இஞ்சி மற்றும் மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் செரிமானத்திற்கும் கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது.

இது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவை சீராக்கும் இதனால் துரிதமாக உணவு செரிக்கப்படும். அதோடு இது சத்துக்கள் உறிந்து கொள்ளவும் துணை புரிகிறது.

தயாரிக்கும் முறை :

முதலில் இரண்டு கிளாஸ் அளவு தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். இவற்றுடன் ஒரு டீஸ்ப்பூன் அளவுள்ள துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும். பின்னர் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை சேர்க்கவேண்டும்.

சூடு :

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்குங்கள். லேசாக அதாவது நீங்கள் குடிக்கும் பதத்திற்கு சூடாகிவிட்டால் இறக்கி விடலாம்.இதனை கொதிக்க வைக்க வேண்டாம். ஏனென்றால் இதில் தேங்காய்ப்பால் சேர்த்திருப்பதால் அவை திரி திரியாக பிரிந்துவிடும்.

இறக்கியதும், சுவைக்காக இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் எண்ணற்ற நல்ல கொழுப்புகள் இருக்கின்றன. அதோடு இதிலிருக்கக்கூடிய மைக்ரோ நியூட்ரிசியன்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவிடும்.

அதோடு நம் உடலில் எனர்ஜியை தக்கவைத்துக் கொள்ளவும், கொழுப்பை கரைக்கவும் இது உதவுகிறது.

தேங்காய் பால் :

தேங்காயில் அதிகளவு ஃபைபர்,விட்டமின் சி,இ,பி1,பி3,பி5 மற்றும் பி6 ஆகியவை இருக்கிறது. இதோடு இரும்புச்சத்து, செலினியம், சோடியம், கால்சியம்,மக்னீஸ்யம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது. இவை உங்களது உடல் நலனுக்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். இது கொழுப்பை கரைக்க உதவிடும்.

மஞ்சள் :

இந்த பானத்தில் அடுத்ததாக நாம் சேர்த்தவை மஞ்சள். ஏற்கனவே பல இடங்களில் மஞ்சளின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்த்திருப்போம். இதிலிருக்கக்கூடிய ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்கள் உணவு செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

இதனோடு சேர்க்கக்கூடிய மிளகு காரத்தன்மை உடலில் சேர்ந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும்.

இஞ்சி :

துருவிய இஞ்சி இரவு நாம் சாப்பிட்ட உணவை வேகமாக ஜீரணிக்க உதவுகிறது. அதோடு இரவில் வயிற்றை அமைதியாக எந்த தொல்லை கொடுக்காமல் வைத்திருக்க உதவுகிறது.

துருவிய இஞ்சிக்கு பதிலாக இஞ்சி சாறு எடுத்தும் கலந்து கொள்ளலாம்.

தேன் :

இறுதியாக தேன் சுவைக்காக மட்டுமே தானே சேர்க்கப்படுகிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். தேனிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய விட்டமின்ஸ், மினரல்ஸ், ப்ரோட்டீன்ஸ்,அமினோ ஆசிட் ஆகியவை நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு வழி வகை செய்யும்.

இனிப்புச் சுவை தானே வேண்டும், தேனுக்கு பதிலாக வெள்ளைச் சர்க்கரையை பயன்படுத்த வேண்டாம். தேனில் இருக்கக்கூடிய சத்துக்கள் எதுவும் வெள்ளைச் சர்க்கரையில் இருப்பதில்லை.

அனைவருக்கும் பகிருங்கள்!