மனைவியின் ஆடைகளை கழற்றச் சொல்லி அதை ஸ்கீரின் ஷாட் எடுத்தனர்! கால் டாக்சி டிரைவர் கதறல்

769

இந்தியாவில் கால் டாக்சி டிரைவரை அடித்து அவரிடமிருந்த பணத்தை பிடுங்கிய பயணிகள், அந்த டிரைவரை மனைவியிடம் வீடியோ காலில் பேசும் படி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் Somashekhar.

கால்டாக்சி டிரைவரான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிங் ஒன்று வந்துள்ளது.

அதாவது Adugodi பகுதியிலிருந்து Dommasandra பகுதிக்கு செல்ல வேண்டும், இரண்டிற்கும் இடையே 22 கி.மீற்றர் ஆகும்.

இதனால் புக்கிங் பயணியை பிக் அப் பண்ணுவதற்காக Somashekhar சென்றுள்ளார். அப்போது காரில் நான்கு பேர் ஏறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிக் கொண்டே சென்ற நபர்கள் திடீரென்று அவரை தாக்கியுள்ளனர் அவரிடமிருந்த பணம் மற்றும் காரின் சாவியை பிடுங்கியுள்ளனர்.

மொத்தம் 9,000 ரூபாயை பிடுங்கிய அவர்கள் மேலும் பணத்தை கொடுக்கும் படி வற்புறுத்தியுள்ளனர். அப்போது அவருடைய பேடிஎம் அக்கவுண்டில் 20,000 ரூபாய் பணம் இருந்துள்ளது. அதை தன்னுடைய உறவினர்கள் மூலம், வங்கி கணக்கிற்கு மாற்றச் செய்துள்ளார்.

அதையும் அவர்கள் எடுப்பது எப்படி என்று அவரிடம் கேட்டு அறிந்து அதன் பின், காரை சுமார் 100கி.மீற்றர் தூரம் வரை ஓட்டிச் சென்றுள்ளனர்.

கார் தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, அவரின் மனைவிக்கு போன் செய்து வீடியோ காலில் பேசும் படி வற்புறுத்தியுள்ளனர்.

வீடியோ கால் பேசும் போது, ஆடைகளை கழற்றும் படி சொல் என்று அவரிடம் கூறியுள்ளனர். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூற, அவரும் வேறு வழியில்லாமல் பேசிய போது, மனைவியும் ஆடைகளை கழற்றியதாக கூறப்படுகிறது.

அப்போது அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்ட அந்த நபர்கள் போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.

இதையடுத்து டிரைவர் மற்றும் அந்த நான்கு பேரும் Ramanagara மாவட்டத்தின் Channapatna பகுதியில் இருக்கும் லாட்ஜில் தங்கியுள்ளனர்.

மறுநாள் காலை Dommasandra கழிவறைக்கு செல்வதாக கூறி, அந்த கழிவறையின் ஜன்னல் வழியாக தப்பி அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் நடந்ததை எல்லாம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

அதன் பின் பொலிசார் அந்த லாட்ஜிக்கு விரைந்து சென்ற போது, அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனால் பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.