வீட்டில் உள்ள பல்லி 2 நிமிடத்தில் வெளியே செல்ல இதை செய்யுங்கள்

1679

வீட்டில் உள்ள பல்லி 2 நிமிடத்தில் வெளியே செல்ல இதை செய்யுங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

உடலுறவின் போது பெண்களுக்கு வலி ஏற்படுவதற்கான 5 காரணங்களும்.. அதனை தடுப்பதற்கான வழிகளும்… 

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது இயற்கையான ஒரு விஷயமே. உடலுறவு கொள்வதால் ஏற்படும் உடல்நல பயன்கள் ஏராளம். எந்தளவிற்கு நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதை அதிகரிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் இருவருக்குமே உடல் நல பயன்கள் வந்து சேரும். ஆனால் அதிலுள்ள பயன்களைப் பற்றி பேசுகையில் அதனால் உண்டாகும் சில சிரமங்களையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உடலுறவின் போது பெண்களுக்கு வலி க்கான பட முடிவு

பெண்களின் செக்ஸ் ஆரோக்கியமும், ஆசைகளும் பல காரணிகளால் ஊக்குவிக்கப்படும். ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பம், மாதவிடாய் முடிவு போன்ற காரணங்கள் இதில் அடக்கம். இருப்பினும், பெண்களுக்கு உடலுறவின் மீது ஈடுபாடு குறைய காரணமாக இருப்பது அந்நேரத்தில் ஏற்படும் வலி. சரி அவைகள் எதனால் ஏற்படுகிறது என்பதையும், அவைகளை எப்படி தவிர்ப்பது என்பதையும் பார்க்கலாமா?

பெண்ணுறுப்பில் வறட்சி

பெண்ணுறுப்பில் வறட்சி
பெண்களுக்கு உடலுறவின் போது வலி ஏற்பட ஒரு காரணமாக இருப்பது இயற்கையான லுப்ரிகேஷன் இல்லாமல் போவது. பெண்ணுறுப்பு வறட்சியாவதற்கு பல காரணங்கள் உள்ளது. கருத்தடை மாத்திரைகள், அழுத்தத்தைப் போக்கும் மாத்திரைகள் மற்றும் அலர்ஜிகளுக்கான மருந்துகள் போன்ற சில மருந்துகள் உங்கள் சருமத்தை வறட்சியாக்கலாம். மாதவிடாய் முடிவு காலத்தின் போது பெண்களுக்கு பெண்ணுறுப்பின் உட்பூச்சில் ஈரப்பதம் குறையும். மேலும் அரிப்பு உண்டாகி, உடலுறவின் போது வலியை ஏற்படுத்தும்.

பெண்ணுறுப்பில் வறட்சியைத் தடுக்க என்ன செய்யலாம்?

பெண்ணுறுப்பில் வறட்சியைத் தடுக்க என்ன செய்யலாம்?
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு தண்ணீர் கலந்த லூப்ரிகண்ட் ஒன்றை பயன்படுத்தி அந்த இடத்தில் ஈரப்பதத்தை உண்டாக்குங்கள். மேலும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு பெண்ணுறுப்பை ஊக்குவிக்கும் காம விளையாட்டில் ஈடுபடலாம். இதனால் அங்கே தானாக லூப்ரிகேட் ஆகும். உங்கள் பிரச்சனைக்கு மருந்துகள் தான் காரணமாக இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு வெந்நீரில் குளிப்பதை தவிர்க்கவும். இது பெண்ணுறுப்பு பகுதியில் வறட்சியை உண்டாக்கும்.

பெண்ணுறுப்பில் தொற்று

பெண்ணுறுப்பில் தொற்று
பெண்ணுறுப்பில் பூஞ்சை அல்லது ஈஸ்ட் தொற்றுக்கள் இருந்தாலும் கூட உடலுறவின் போது வலி ஏற்படும். இந்த தொற்றுக்களால் அரிப்பு, எரிச்சல் தன்மை, பெண்ணுறுப்பில் வறட்சி ஆகியவைகள் ஏற்படும். சில நேரங்களில் கர்ப்பவாயில் ஏற்படும் தொற்றினாலும் கூட உடலுறவின் போது வலி ஏற்படலாம். உடலுறவின் போது ஆணுறுப்பு ஆழமாக நுழையும் போது, பெண்ணின் கர்ப்பவாய் வரை செல்வதே இதற்கு காரணமாகும்.

பெண்ணுறுப்பில் தொற்றுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

பெண்ணுறுப்பில் தொற்றுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
பெண்ணுறுப்பு தொற்றுக்களை குணப்படுத்த உதவும் க்ரீம்களை பயன்படுத்துங்கள். இருப்பினும் அவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுங்கள். கர்ப்பவாயில் தொற்று ஏற்பட்டால் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும். இல்லையென்றால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க சில சோதனைகளையும் எடுக்க வேண்டியிருக்கும்.

பெண்ணுறுப்பில் காயம்

பெண்ணுறுப்பில் காயம்
இயற்கையான பிரசவத்தின் போது அல்லது அறுவை சிகிச்சையின் போது பெண்ணுறுப்பில் கிழிசல் ஏற்பட்டாலும் கூட, குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படலாம்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?
மருத்துவர்கள் பரிதுரைத்ததைப் போல், பிரசவம் முடிந்த 6 வார காலம் வரை உடலுறவில் ஈடுபட அவசரப்படாதீர்கள். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள புண்கள் ஆறுவதற்கு நினைத்ததை விட கூடுதல் காலம் தேவைப்படும். சொல்லப்போனால், உங்கள் பெண்ணுறுப்பு முழுமையாக குணமடையவில்லை என்றால் அது வரை உடலுறவிற்கு விடுமுறை அளியுங்கள். பிரவத்திற்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருந்தாலும் கூட பெண்ணுறுப்பு பகுதி வறண்டு போகும். இதனால் ஆணுறுப்பை நுழைப்பது சிரமமாகி விடும்.

கருப்பை சுவரியக்கம்

கருப்பை சுவரியக்கம்
ஆணுறுப்பு உள்ளே நுழைய முயற்சி செய்யும் போது பெண்ணுறுப்பில் நரம்புப் பிடிப்பு ஏற்படுவது தான் இந்த நிலையை குறிக்கும். இதற்கு முன் ஏற்பட்ட அதிர்ச்சி, வலி அல்லது பிற உளவியல் காரணங்கள் தான் இந்த நரம்புப் பிடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?
அமைதியுறும் வழிமுறைகள், தம்பதி சிகிச்சை அல்லது போடோக்ஸ் போன்ற சமீபத்திய சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் நீங்கள் உடலுறவு கொள்ளும் போது உங்களுக்கு வலிய ஏற்படலாம் தடுக்க உதவும். சில நேரம் கூம்பு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும் கூட இதற்கு நிவாரணம் கிடைக்கும்.

பெண்கள் பிற பிரச்சனைகள்

பெண்கள் பிற பிரச்சனைகள்
நார்த்திசுக்கட்டிகள், கருப்பையில் கட்டி, உட்கருப்பையிய புத்து வீச்சு, இடுப்பு எலும்பு அழற்சி நோய்கள் மற்றும் இடம்மாறிய பிரசவம் போன்ற சில காரணங்களாலும் கூட ஆணுறுப்பை ஆழமாக நுழைக்கும் போது பெண்களுக்கு வலி ஏற்படலாம். இதுப்போக பாலியல் ரீதியான நோய்கள் இருந்தாலும் கூட, உடலுறவின் போது வலி ஏற்படலாம்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?
இந்த பிரச்சனைகள் பலவற்றுக்கும் மருத்துவ உதவியை தான் நாட வேண்டும். மேலும் இந்த பிரச்சனைகளின் அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். அதனால் உடலுறவின் போது ஏற்படும் வலிக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து பாருங்கள்.