புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டிடத்திற்குள் புகுந்து வெடித்து சிதறிய விமானம்!

115

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியுள்ளது.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தில் உள்ள ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தில் தான் குறித்த பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானத்தின் உள்ளே எத்தனை பேர் இருந்தார்கள் என்ற தகவல் உடனடியாக வெளிவராத நிலையில் இச் சம்பவம் இடம்பெற்று இரு நாட்களுக்கு பின்தெரியவந்துள்ளது.

6 பேர் பயணிக்கும் சிறிய ரக விமானத்தில் எலாடியோ மார்கூ (51) என்ற விமானியும், உடன் ஒரு பயணியும் இருந்துள்ளனர். இருவரும் இவ்விபத்தில் இறந்துள்ளனர்.

அதாவது, விமானம் புறப்பட்டு 5- ஆவது நிமிடத்திலேயே என்ஜினில் தீப்பற்றியுள்ளது. இது குறித்து விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால், அதற்குள் குறித்த விமானம் கட்டிடத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியுள்ளது. கட்டிடத்திற்குள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.