பேபி சாரா-வா இது?… புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

470

தமிழில் விக்ரம் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான “தெய்வத்திருமகள்” படத்தில் விக்ரமின் மகளாக நடித்த குழந்தையை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பேபி சாரா தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

“தெய்வத்திருமகள் ” படத்திற்கு பிறகு தமிழில் “சித்திரையில் நிலாச்சோறு, சைவம்,விழித்திரு” போன்ற படங்களில் நடித்திருந்தார் பேபி சாரா. தற்போது ஹலிதா சமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பேபி சாரா.

இயக்குனர் ஹலிதா சமீம் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “பூவரசம் பீப்பி ” என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் சமுத்திரக்கனி, நடிகை சுனைனா லீலா சாம்சன் போன்றவர்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் 4 கதைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் பேபி சாரா பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு பேபி சாரா சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரைப் பார்த்த அனைவரும் பேபி சாராவா இது என்று ஆச்சர்யபட்டுள்ளனர். அந்த அளவிற்கு தற்போது வளர்த்துள்ளார் பேபி சாரா. தற்போது அவருக்கு 14 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.