மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த கணவன்: அடுத்து செய்த அதிர்ச்சி செயல்

405

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து, 500 ரூபாய் கொடுத்தால், விபச்சாரத்துக்கு வருவார் என வாட்ஸ் ஆப்பில் பரப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் வேலுாரில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் புகார் அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தார்.

பின்னர் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரிந்தது.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். இதில் வேலுார் கஸ்பாவைச் சேர்ந்த குமார் (35) என்பவரின் மனைவி சசிகலா (30) என்பது தெரிந்தது.

மது போதைக்கு அடிமையான குமாருக்கும், சசிகலாவுக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

சில நாட்களுக்கு முன் நடந்த தகராறால் ஆத்திரமடைந்த குமார், சசிகலா குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில், சசிகலாவின் மொபைல் போன் எண்ணுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், 500 ரூபாய் கொடுத்தால் அவர் விபசாரத்துக்கு வருவார் எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தது தெரிந்தது. இதையடுத்து குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.