வீட்டிலேயே பிரசவம்.. புதைக்கப்பட்ட குழந்தை! அதிக ரத்த போக்கால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

176

தமிழகத்தில் வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவருடைய மனைவி கோமதி (26).

தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் கோமதி மீண்டும் கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோமதிக்கு கடந்த 2-ந் திகதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தனர்.

அப்போது குழந்தை இறந்தே பிறந்தது, இதனை தொடர்ந்து குழந்தையை வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் புதைத்தனர்.

வீட்டில் பிரசவம் நடந்ததால் கோமதிக்கு அதிகளவு ரத்தப்போக்கு இருந்தது. இதனை தொடர்ந்து அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டனர். அதற்கு கோமதி, வீட்டில் குழந்தை இறந்தே பிறந்ததாகவும், பொலிசுக்கு தெரியாமல் உடலை புதைத்து விட்டதாகவும் கூறினார்.

உடனடியாக கோமதிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல்நிலை மோசமாக கோமதி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் பற்றி அறிந்த பொலிசார் விரைந்து சென்று கோமதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் வீட்டின் பின்புற தோட்டத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தை மற்றும் கோமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.