அன்று 595 கிலோ எடை கொண்ட இளைஞர்.. இன்று எப்படி இருக்கிறார்? அசரவைக்கும் மாற்றம்

991

மெக்சிகோவைச் சேர்ந்த 600 கிலோ எடை கொண்ட நபர், தன்னுடைய எடையை 300 கிலோ அளவிற்கு குறைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மெக்சிகோவின் அகுவாஸ்கேலினேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜூவான் பெட்ரோ பிராங்கோ. 34 வயதான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு 595 கிலோ எடை இருந்தார்.

இதனால் உலகில் அதிக எடை கொண்ட மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். அதிக உடல் எடை கொண்ட காரணத்தினால் படுக்கையிலே இருந்தார்.

படுத்துக் கொண்டே இருந்த காரணத்தினால், அவருக்கு சர்க்கரை நோய் ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னை ஆகியவை அதிகமாக இருந்தது.

உடனடியாக சிகிச்சை எடுத்தால் மட்டுமே வாழமுடியும் என்று மருத்துவர்கள் கூறியதால், தன் சொந்த மாநிலத்திலிருந்து மேற்கு பகுதியில் உள்ள கவுடலராஜாவுக்கு குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தார்.

அதன் பின் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சைகள், தொப்பையை குறைப்பதற்கு மாத்திரைகள் மற்றும் அவருக்காகவே பிரத்யோகமான உடற்பயிற்சி கருவிகள் வடிவமைக்கப்பட்டன.

அந்த உடற்பயிற்சி உபகரணங்களை வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததால், அவரின் எடை படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சினை மேற்கொண்டு வந்ததன் பயனாக 595 கிலோவில் இருந்த நபர் தற்போது 291 கிலோவாக உள்ளார்.

சுமார் 300 கிலோ அளவிற்கு எடையை குறைத்துள்ளதால், அவர் தன்னுடைய கின்னஸ் சாதனையை இழந்தார்.

இது குறித்து ஜூவான் கூறுகையில், நான் 6 வயதில் இருந்த போதே 60 கிலோ எடை இருந்தேன், அதன் பின் என்னுடைய எடை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

பிறந்ததில் இருந்தே எடை அதிகரித்து கொண்டே இருந்ததால், அதைப் பற்றி நினைத்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்.

என்ன தான் டயட் இருந்தாலும், உடல் எடை அதிகரித்து கொண்டே தான் சென்றது. 17 வயதில் கார் விபத்தில் சிக்கினேன். இதனால் என்னுடைய எடை மேலும் அதிகரித்தது.

இரண்டு வருடங்களுக்கு பின் முடிவு எடுத்து எடை குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன். அதன் பயனாக இவ்வளவு எடை குறைத்துள்ளேன்.

தற்போது என்னால் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க, உடைகளை உடுத்திக் கொள்ள முடிகிறது.138 கிலோ எடை குறைக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள் என்று கூறியுள்ளார்.