வெளிநாட்டுக்கு ஆசையாக வேலைக்கு போன மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே! கதறும் தாய்

218

ஈரானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் இரண்டு இந்திய இளைஞர்கள் பணியின் போது உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மோகன் வெங்கட நாயுடு (25). இவர் 2012 -ல் மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த நிலையில் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை செய்தார்.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

அதே போல ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விகாஸ் என்ற இளைஞரும் ஈரான் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 24-ஆம் திகதி ஈரான் துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்ட நிலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மோகனும், விகாஸும் உயிரிழந்தனர்.

இருவரும் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர்களின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியவில்லை.

இதையடுத்து மோகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவ வேண்டும் என மோகன் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளார்.

மோகனின் தாய் பில்ல பவானி கூறுகையில், என் மகன் மறைவால் என் வாழ்க்கையே அழிந்துவிட்டது. ஆசையாக வேலைக்கு போய் உயிரை விட்டுள்ளான்.

ஒரு தாயின் வலி என்ன என்பதை உணர்ந்து என் மகனின் முகத்தை கடைசியாக பார்க்கும் வாய்ப்பை வழங்க உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையில் மோகன் இயற்கைக்கு மாறாக இறந்துள்ளதாக ஈரான் நாட்டு பொலிசார் சந்தேகிப்பதால் விசாரணை நடந்து வருவதாகவும், இதனாலேயே சடலத்தை அனுப்ப தாமதம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.