எனக்கு என் குட்டி வேணும், இலட்சகணக்கான பேரை உருக வைத்த குழந்தையின் போரட்டம்.. தீயாய் பரவி வரும் காணொளி!

644

இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு ஏழ்மையான ஒரு வீட்டில் பின்பகுதியில் அங்கே சுவற்றின் அருகே நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

பிறந்த குட்டிகளை தன் பக்கத்துலேயே அரவணைத்து காத்து வருகிறது. அதிலிருந்து ஒரு குட்டியை அந்த வீட்டு குழந்தை ஆசையாக தன் கையில் எடுத்து செல்கிறது. ஆனால் இதை பார்த்த அந்த தாய் நாய் குழந்தையின் கையில் இருந்த தன் குட்டியை விடாமல் பிடுங்குகிறது. இதற்காக குழந்தையை தள்ளி கீழே சாய்க்கிறது தாய் நாய்.

குழந்தையும் குட்டியுடன் சேர்ந்து தரையில் விழுகிறது. மீண்டும் தாய் நாய் குட்டியை குழந்தையிடம் பெற்று கொண்டு போய் மற்ற குட்டிகளுடன் இணைத்து விடுகிறது.

நாய்க்குட்டியை கையிலிருந்து பிடுங்கியதும் குழந்தை அழுது கொண்டே கத்த தொடங்குகிறது. ஆனால் தன் குட்டிகளுக்கு துணையாக பக்கத்தில் தாய் நாய் நின்று கொள்கிறது.

பிறகு குழந்தை அழுதுகொண்டே திரும்பவும் குட்டியை எடுத்து கொண்டு திரும்புகிறது, பின்னாடியே வந்து நாய் அதை பிடுங்கி கொண்டு போய் விடுகிறது. ஒவ்வொரு முறை குட்டியை பிடுங்கும்போதும், தன் வாயால் பதமாக குட்டிக்கு வலிக்காமல் கவ்வி கொண்டு போகிறது அந்த நாய்.

இந்த வீடியோவை பார்க்கும்போது, குழந்தைக்கு நாய்க்குட்டி மேல் உள்ள அன்பை இது காட்டுகிறதா? அல்லது யாராக இருந்தாலும் தன் குட்டியை தர மாட்டேன் என்ற நாயின் பாசத்தை காட்டுகிறதா? என்று தெரியவில்லை.

ஆனால் எந்த உயிரினமாக இருந்தால் என்ன. எந்த இனமாக இருந்தால் என்ன. அங்கு அன்பு மட்டுமே இருக்கும் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

Posted by Siranjeevi Dhanapal on Thursday, December 6, 2018