கணவன் இறந்த சில நாட்களிலே வேறொரு இளைஞனுடன் சுற்றித் திரிந்த மனைவி: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

798

தமிழகத்தில் காதலனுக்காக கணவனை மனைவி விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் விசாரணையில் தெரியவந்ததால் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (27). லாரி டிரைவரான இவருக்கும் கலைமணி(19) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளான்.

இந்நிலையில் கடந்த மாதம் 8-ஆம் திகதி ஈஸ்வரன் திடீரென இறந்துவிட்டார். கணவன் அளவுக்கு அதிகமான மது அருந்தியதன் காரணமாகவே இறந்துவிட்டதாக கலைமணி உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையும் நம்பிய உறவினர்கள் ஈஸ்வரனை புதைத்துள்ளனர். கணவன் இறந்த சில நாட்களிலே கலைமணி வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.

இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர், அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கலைமணி அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (26) என்ற இளைஞருடன் சுற்றித் திரிவது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

அதன் பின் அவர் மீது சந்தேகமடைந்த உறவினர்கள், ஈஸ்வரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் ஈஸ்வரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் உடனடியாக கலைமணியை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், கலைமணிக்கும், அழகர்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதற்கு கணவர் இடையூராக இருந்ததால், ஈஸ்வரனுக்கு அவர் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார் என்ற உண்மை தெரியவந்துள்ளது.

விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.