தம்பியை நம்பி வீட்டில் தங்க வைத்த அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 15 வயது சிறுமி சொன்ன தகவல்

1842

தமிழகத்தில் சொந்த அக்காவின் மகளை கர்ப்பமாக்கிய நபரை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை பெருங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலு(43). இவருக்கு கவுசல்யா(35) என்ற மனைவியும் சாந்தி என்ற 15 வயது மகளும் உள்ளனர்.

சாந்தி அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருக்கும் சாந்தியின் தாய்மாமன் கிருபாநந்தன்(22) சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார்.

அப்போது வேலையும் கிடைத்ததால், அக்காவின் வீட்டில் தங்கிய படியே வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதையடுத்து சாந்திக்கு நேற்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா அவரை உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாந்தி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதற்கு காரணம் யார் என்று கேட்ட போது, கிருபாகரனை கூறியுள்ளார்.

சொந்த தம்பியே இப்படி செய்துவிட்டதால், அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின் பொலிசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.