கீழ விழுந்த அடுத்த நிமிடமே லாரி சக்கரம் ஏறிடுச்சுயா.. பரிதாபமாக இறந்த சிறுமியின் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கண்ணீர்

509

தமிழகத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி விபத்தில் இறந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் லாரியோட பின் சக்கரம் அப்படியே அந்த சிறுமியின் தலையில் ஏறி இறங்கிவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் லிஜோ. இவரது மனைவி ஜினினா மற்றும் மகள் ஜெமீமா அச்சு மேத்யூ சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மண்டபம் சாலையில் வசித்து வருகின்றனர்.

ஜினினாவின் கணவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (13) சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் தனது மாமாவுடன் ஜெமீமா இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஜீனுவின் மகள் கிஷியாவும் உடன் சென்றார்.

அப்போது கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை தாமோதரன் தெரு சந்திப்பில் செல்லும் போது திடீரென எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், மாணவி ஜெமீமா கீழே விழுந்தார். அப்போது லாரியின் டயர் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், அந்த சம்பவம் எங்க கண்முன்னாடி தான் நடந்தது.

வலது புறம் பேருந்து, இடது புறம் தண்ணீர் லாரி, அதற்கு நடுவில் ஸ்கூல் பிள்ளைகளுடன் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

அவசர, அவசரமாக வந்த அவர் பேருந்துக்கும், லாரிக்கும் நடுவில் செல்ல பார்த்தார். ஆனால் அவரால் வாகனத்தை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.

பைக்கில் இருந்த அந்த ஸ்கூல் பொண்ணு சாலையில் விழுந்தது தான், அடுத்த நிமிடமே தண்ணீர் லாரியோட பின் சக்கரம் அப்படியே ஏறிவிட்டது.

நாங்க எல்லாம் அப்படியே ஓடுறதுக்குள்ள அந்த பொண்ணு இறந்துவிட்டது என்று கூறியுள்ளார்.