குறட்டைப் பழக்கத்தை போக்க தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.

397

நாள்பட்ட மற்றும் பயங்கர சப்தத்துடனான குறட்டை என்பது சரியான நேரத்தில் கவனிக்க வேண்டிய சுகாதார பிரச்சனையாகும். ஒருவருக்கு குறட்டையானது தொண்டையில் உள்ள தசைகள் தளர்ந்து இருக்கும் போது, காற்று உள்ளே சென்று வரும் போது ஏற்படும் அதிர்வுகளால் வருவது ஆகும். மேலும் குறட்டை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நெஞ்சு சளி உள்ளவர்களுக்கும் வரும்.

இக்கட்டுரையில் குறட்டை பிரச்சனையை சரிசெய்யும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சித்து, குறட்டையில் இருந்து விடுபடுங்கள்.

ஏலக்காய்
மருத்துவ குணம் நிறைந்த ஏலக்காய், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புக்களை நீங்குவதோடு, நெஞ்சு சளியைக் குறைத்து, மெதுவாக குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.

மஞ்சள்
மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் உள்ளது. இது உடலினுள் உள்ள அழற்சியை சரிசெய்து, சப்தத்துடனான குறட்டையைக் குறைக்கும். மேலும் மஞ்சள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்யும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள்.
இந்த பாலை தினமும் இரவில் படுக்கும் முன் குடித்தால், குறட்டை பிரச்சனை நீங்கும்.

நெட்டில்
நெட்டில் என்னும் மூலிகை குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் பண்புகள், குறட்டையில் இருந்து விடுவிக்க உதவும்.

ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த நெட்டில் இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டிக் குடியுங்கள்.

பூண்டு
பூண்டு சுவாசப் பாதையில் சளியின் தேக்கத்தை எதிர்த்துப் போராடும். மேலும் இது சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பான பொருளும் கூட.

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட, 1-2 பூண்டு பற்களை சாப்பிட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடியுங்கள்.

தேன்
தேனில் உள்ள மருத்துவ குணம், குறட்டையில் இருந்து ஒருவரை விடுவிக்கும். முக்கியமாக இது சுவாச பாதையில் ஏற்படும் அடைப்புகளால் உண்டாகும் அதிர்வுகளைக் குறைக்கும்.

1 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வாருங்கள். இதனால் மெதுவாக குறட்டை பிரச்சனை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீமைச்சாமந்தி
சீமைச்சாமந்தி மற்றொரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், குறட்டைக்கு காரணமான சுவாசப் பாதையில் உள்ள வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்கும்.

ஒரு கப் சுடுநீரில் சிறிது சீமைச்சாமந்தி பூக்கள் அல்லது சீமைச்சாமந்தி டீ பேக்குகளை வைத்து 10 நிமிடம் ஊற வையுங்கள். பின் அதை வடிகட்டி, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.

வெந்தயம்
செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் குறட்டை வரக்கூடும். வெந்தயம் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் என்பதால், இதை அன்றாடம் சாப்பிடுங்கள்.

அதிலும் வெந்தயத்தை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் படுக்கும் முன் நீருடன் விதைகளை சாப்பிடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

யூகலிப்டஸ் ஆயில்
யூகலிப்டஸ் ஆயில் குறட்டையில் இருந்து விடுவிக்கும் சிறப்பான பொருள். இது நெஞ்சு சளியை எதிர்த்து போராடுவதோடு, சுவாசப் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

இரவில் படுக்கும் முன் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை சில நிமிடங்கள் நுகர்ந்து வாருங்கள்.
இப்படி செய்வதால், அந்த நறுமணத்தால் சுவாசப் பாதையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, குறட்டை தடுக்கப்படும்.

சேஜ்
சேஜ், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நிறைந்த சக்தி வாய்ந்த ஒரு மூலிகை. இது மூக்கில் உள்ள அழற்சியைக் குறைக்கும். அதற்கு ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது சேஜ் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்நீரால் ஆவி பிடியுங்கள்.

இஞ்சி டீ
இஞ்சியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை பகுதியை மென்மையாக்கும். மேலும் இஞ்சி நாசிக் குழியை திறந்து, வீக்கத்தைக் குறைக்கும். அதற்கு கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு இறக்கி வடிகட்டி தேன் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்

புதினா
புதினாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், தொண்டை மற்றும் மூக்கின் புறணியில் உள்ள சவ்வுகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் புதினா மென்மையான சுவாசத்தை ஊக்குவிக்கிறது.

ஒரு டம்ளர் நீரில் 2 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின் அந்நீரால் இரவில் தூங்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள்.
வேண்டுமானால் இரவில் படுக்கும் முன் புதினா எண்ணெயை நன்கு சுவாசித்துக் கொள்ளுங்கள். இதனாலும் குறட்டையைத் தவிர்க்கலாம்.