சினிமாவிற்கு வரும் முன் நயன்தாரா செய்த வேலை என்ன தெரியுமா?

893

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

சமீபத்தில் தல அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 63 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா பற்றிய ஒரு உண்மை கசிந்துள்ளது அதாவது, ‘விஸ்வாசம்’ படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக இருந்த சிற்றரசு என்பவர் இதுவரை நயன்தாரா பற்றி யாரும் வெளியிடாத ஒரு ரகசியத்தை பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

சிற்றரசு கூறுகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இல்லை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

nayanthara image in viswasam க்கான பட முடிவு

ஒருநாள் படப்பிடிப்பிற்கு வரும் போது, சில ஆலோசனைகளை நயன்தாரா வழங்கினாராம் . அவரது தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருந்ததாம். அடுத்த ஒரு வாரம் எந்தவித படப்பிடிப்பும் அவருக்கு இல்லாததால்.. விஷ்ணுவிடம் தான் உதவி இயக்குநராக இருக்கட்டுமா? என்று கேட்டுள்ளார். இதற்க்கு அவரும் ஓகே சொல்ல சில நாட்களாக உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் நயன்தாரா.