சின்மயி அம்பலமாக்கிய தகவல்…ஏமாந்துவிட்டாரா நடிகர் ராதாரவி: வெளியான புகைப்படம்

407

மலேசியாவில் தனக்கு டத்தோ பட்டத்தை சுல்தான் வழங்கியதாக நடிகர் ராதாரவி தெரிவித்திருந்தார்.

ராதாரவி பெயரின் முன்பு டத்தோ என்ற பட்டம் இருக்கும். ஆனால் இந்த பட்டமே போலியாக வைத்திருக்கிறார் என பாடகி சின்மயி புகார் கூறியதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனுப்பிய மெயிலையும் ஆதாராமாக கூறினார்.

ராதாரவி அதை மறுத்ததோடு, தனக்கு பட்டம் அளித்தவர்களையே அவமதிக்கும் வகையில் இருக்கிறது இதனால் சின்மயி மலேசியா செல்லவே தடை விதிக்கலாம் என கூறி இருந்தார்.

மேலும், சின்மயியை நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்கிறேன், அவர் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் என கூறினார்.

இந்நிலையில், ராதாரவிக்கு சுல்தானால் டத்தோ பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட மலாக்கா மாகாணமும் ஒன்று. மேலும் ராதாரவி டத்தோ பட்டத்தை சுல்தானிடம் வாங்குவது போன்ற படம் வெளிவந்தது.

அதை ஆராய்ந்து பார்க்கையில் அதில் இருப்பவர் போலி சுல்தான் என மலேசிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டவர் என கூறப்படுகிறது.

போலியான சுல்தானிடம் பட்டம் வாங்கி, நடிகர் ராதாரவி ஏமாந்துவிட்டதாக இந்த புகைப்படம் மூலம் கூறப்படுகிறது.