தம்பி மனைவி மீது அண்ணனுக்கு ஆசை…அண்ணனுக்கு தம்பி மனைவி மீது காதல்: இறுதியில் ஒரு உயிர் பரிபோன பரிதாபம்

1424

தம்பிக்கு மனைவியாக இருக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் என்பவரின் மனைவி லட்சுமி (வயது23).

விஷாலுக்கு தனது தம்பியான யோகேந்திராவின் மனைவி சோனு மீது காதல் ஏற்பட்டுள்ளது.

அதே போன்று தம்பிக்கோ அண்ணன் மனைவி லட்சுமியின் மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படி, விஷாலின் மனைவி லட்சுமியை தம்பிக்கும், யோகேந்திராவின் மனைவி சோனுவை அண்ணனுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தம்பி மனைவி சோனு தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற விரக்தியில், தம்பி யோகேந்திராவுடன் சேர்ந்து விஷால் தாலி கட்டிய மனைவி லட்சுமியை கொலை செய்தார்.

இது குறித்து தகவல் தகவலறிந்த பொலிசார் விஷால் மற்றும் யோகேந்திரா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.