பள்ளி மாணவனை வீட்டிற்கு அழைத்து நெருக்கமாக இருந்த பெண் ஆசிரியர்! போனை பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை

465

அமெரிக்காவில் திருமணமான பெண் ஆசிரியர் 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருந்ததால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் Michigan பகுதியில் இருக்கும் Stockbridge மேல்நிலைப் பள்ளியில் துணை ஆசிரியர் மற்றும் கால்பந்து சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளராக Allyson Moran(27) என்ற பெண் ஆசிரியர் இருந்துள்ளார்.

கடந்த 2016-17-ஆம் ஆண்டுகளில் மாணவர்களும் மிகவும் நெருக்கமாக பழகுவதாக, அந்த பள்ளியால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

திருமணமான இவர் Snapchat ஆப் மூலம் 16 வயது பள்ளி மாணவனுடன் பேசி வந்துள்ளார். அப்போது அந்த மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவனுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். 18 வயதிற்கும் குறைவான சிறுவனை வற்புறுத்தி நெருக்கமாக இருந்ததால், கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அது தொடர்பான வழக்கு நடந்து வந்த வேளையில், கடந்த புதன் கிழமை இதற்கான தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது.

அதில் Allyson Moran-வுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த மாணவனை ஆசிரியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று இரண்டு முறை நெருக்கமாக இருந்துள்ளார். அதற்கான ஆதாரம் பொலிசாரிடம் கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி மாணவனின் தந்தை எதிர்பாரதவிதமாக அவரது போனை பார்த்த போது, அரைநிர்வாணமாக இருக்கும் குறித்த ஆசிரியரின் இரண்டு புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னரே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரும் ஆசிரியரின் போனில் உள்ள தகவல்களை பார்த்த போது, இது உறுதியானது என்று கூறியுள்ளது.