100 வயசு வாழணுமா வெண்டைக்காய் சாறு எடுத்து இப்படி குடிங்க போதும்.

357

வெண்டைக்காய் என்பது உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு சாப்பிடப்பட்டு கொண்டிருக்கும் ஒரு காயாகும். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த காயை சுவைக்காக சாப்பிடுபவர்களை விட ஆரோக்கியத்திற்காக சாப்பிடுபவர்களே அதிகம். நமது சமூகத்தில் பரவலாக நிலவும் ஒரு கருத்து வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்பது. இது ஓரளவுக்கு உண்மையும் கூட.

இதன் சுவை என்பது அது சமைக்கப்படும் முறையை பொறுத்தது. ஏனெனில் வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் இதனை மருந்தாக நினைத்தாவது அனைவரும் சாப்பிட பழக வேண்டும். ஏனெனில் இது வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் அப்படி. இந்த பதிவில் வெண்டைக்காய் சாறை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

அனிமியா
அனிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காயின் பலனை பெற இதன் சாறை பருகலாம். வெண்டைக்காய் சாறு சிவப்பு இரத்த அணுக்களை அதிகம் உற்பத்தி செய்யக்கூடியது, இது அனிமியாவை குணப்படுத்த உதவும். வெண்டைக்காய் சாறில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளது. இவை அனைத்தும் அதிக சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகிறது.

தொண்டைப்புண்
வெண்டைக்காய் சாறு தொண்டை புண்ணுக்கான மிகச்சிறந்த மருந்தாகும். தொண்டைப்புண் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாறை தாரளமாக குடிக்கலாம். இதில் உள்ள ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகள் இந்த அற்புதத்தை செய்கிறது.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்து வெண்டைக்காய் சாறாகும். வெண்டைக்காய் சாறில் இன்சுலின் பண்புகள் உள்ளது, இவை சர்க்கரை நோயை குணமாக்க பயன்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பயன்படுகிறது. தினமும் காலையில் வெண்டைக்காய் சாறு குடிப்பது உங்கள் சர்க்கரை நோயை குறைக்கும்.

வயிற்றுப்போக்கு
மிகவும் எரிச்சலூட்டும் ஒரு ஆரோக்கிய கேடு என்றால் அது வயிற்றுப்போக்குதான். இது உடலில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகளை இழக்க செய்கிறது. வெண்டைக்காய் சாறு வயிற்றுப்போக்கை குணப்படுத்தி மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

கொழுப்பின் அளவை குறைக்கிறது
இந்த காயில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது, இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்ற பயன்படுகிறது. தொடர்ச்சியாக இந்த சாறை பருகுவது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது.

மலச்சிக்கலை குணப்படுத்துகிறது
கொழுப்பின் அளவை குறைக்கும் வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்துகள் மலச்சிக்கலில் இருந்தும் உங்களுக்கு நிவாரணம் வழங்குகிறது. இயற்கையான மலமிளக்கியாக செயல்படும் வெண்டைக்காய் சாறு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் குடல் இயக்கங்களை சீர்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்
நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்திதான் நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது குறிப்பாக சளி மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது. வெண்டைக்காய் சாறில் உள்ள வைட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலத்தை அதிகரிக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியம்
தொடர்ச்சியாக வெண்டைக்காய் சாறை குடிப்பது உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, முகப்பரு மற்றும் சருமம் தொடர்பான மற்ற பிரச்சினைகளை குணப்படுத்த பயன்படுகிறது. தெளிவான சருமம்தான் உண்மையில் அழகான சருமம் ஆகும்.

ஆஸ்துமா
வெண்டைக்காய் சாறு குடிப்பது ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது மேலும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாறை குடிப்பதும் அதன் தாக்கத்தை குறைக்கும்

எலும்புகளின் ஆரோக்கியம்
வெண்டைக்காய் சாறு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள போலேட் என்னும் சத்து கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் நன்மைகளை வழங்கக்கூடியது. இது எலும்புகளின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிக்கும் மற்றும் ஆஸ்டாபோரோசிஸ் ஏற்படுவதை தடுக்கிறது.