16 லட்சம் பணத்தினை சாப்பிட்ட ஆடு: கோபத்தில் ஆட்டினை சமைத்து சாப்பிட்டு பழிதீர்த்த குடும்பம்

1489

பசித்ததால் 16 லட்சம் பணத்தினை சாப்பிட்ட ஆடு: கோபத்தில் ஆட்டினை சமைத்து சாப்பிட்டு பழிதீர்த்த குடும்பம்

செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமத்தை சேர்ந்த சிமிக் இனக் குடும்பம் விவசாய தொழில் செய்து வந்துள்ளது.

இந்த விவசாய குடும்பத்தினர் புதிதாக 10 ஹெக்டர் நிலம் வாங்க ரூ.16 லட்சம் மதிப்பிலான பணத்தை வைத்திருந்தனர்.

நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மேஜையில் வைத்து விட்டு கதவை மூடாமல் வயலுக்கு சென்று விட்டனர்.

இந்த சூழலில் அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கு மேஜையில் இருந்த ரூ. 16 லட்சம் மதிப்பிலான பணத்தை பார்த்ததும், அதனை சாப்பிட்டு பசிதீர்த்துள்ளது.

வீடு திரும்பியவர்கள் பணத்தை காணாமல் தேடினர். பின்னர் வெளியில் வந்து சோதித்த போது, ஆட்டு வாயில் பணத் துகள்கள் மிச்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

இதனால் அந்த குடும்பம் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருந்தனர். இதனிடையே மொத்த பணத்தையும் தின்று தீர்த்த ஆத்திரத்தில் அந்த ஆட்டை அந்த குடும்பத்தினரே கொன்று சமைத்து சாப்பிட்டனர்.