பலமுறை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி: நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்..!

313

கடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் – தந்திரிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறான கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் குறித்த சிறுமியை பலாத்காரம் செய்த ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, குறித்த சிறுமியை பலாத்காரம் செய்த மேலும் பலரை கைது செய்ய மேற்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடவத்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் மூத்த சகோதரனின் நண்பனால் குறித்த சிறுமி இதற்கு முன்னர் பலமுறை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையான குறித்த இளைஞன் அதன்பின்னர் சிறுமியை கடவத்தை- மேல் பியன்வில பிரசேத்திற்கு அழைத்துச் சென்று திருமணமான நபர் ஒருவருக்கும் பல இளைஞர்களுக்கும் 1000 ருபாய்க்கு விற்பனை செய்தததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கடவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.