குளிரை போக்க ஹீட்டர் பயன்படுத்திய குடும்பம்: பரிதாபமாக பறிபோன 8 உயிர்கள்

835

பாகிஸ்தான் நாட்டில் குளிரை போக்க பயன்படுத்திய ஹீட்டரில் இருந்து வாயு கசிந்ததில் மூச்சு திணறி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கே அபோதாபாத் நகரில் பண்டி தொண்டியான் கிராமத்தில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் வசித்துவரும் ஒரு குடும்பத்தினர் இரவில் தூங்க செல்வதற்கு முன் அதிக குளிர் காரணமாக ஹீட்டரை ஓன் செய்து விட்டு தூங்கி உள்ளனர்.

இந்த நிலையில் அந்த ஹீட்டரானது திடீரென செயலிழந்து போயுள்ளது. அதன்பின்னர் அதில் இருந்து கசிந்த வாயு வீடு முழுவதும் பரவியுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் மூச்சு திணறி பலியாகியுள்ளனர்.

இந்த பகுதிக்கு அருகே இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் ஹீட்டரை ஓன் செய்து விட்டு தூங்க சென்ற 3 பேர் ஹீட்டர் வாயு கசிவால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.