எண் 1 இல் பிறந்தவர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

782

எண் 1 க் கொண்ட நபர்கள், எப்போதும் தலைவராக இருப்பவர்கள். எதையும் முன்னடத்தி செல்பவர்கள். எண்கணித அறிவியல் படி, அவர்களின் துணையை கூட ஆளுவதற்கு முயற்சி செய்கின்றனர்.

அவர்களின் முடிவே எல்லாவற்றிலும் இறுதியாக நிலைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் ராசியைப் பொருத்தும் பல விஷயங்கள் அமையும் என்றாலும், அவர்களுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்ய வைக்க யாராலும் முடியாது.

காதலைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் காதலை கைவிட விரும்புவதில்லை. குழந்தை பருவத்தில் இருந்து விரும்பும் ஒருவரை அவர்கள் பெரும்பாலும் மணமுடிக்கின்றனர்.

எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் சமரசம் செய்வதில்லை, அவர்கள் அசாதாரண மனிதர்களை விரும்புவதற்கு காரணம் அவர்களின் அசாதாரண குணம் என்று அவர்கள் உணர்கின்றனர். அவர்கள் உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விட, நடைமுறையை பின்பற்றுபவராக இருக்கிறார்கள்.

மேலும் அழகை ஆராதிக்கக்கூடியவர்கள் அவர்கள். நீண்ட நாட்கள் பிரம்மச்சாரியாக இருந்தாலும், யாரவது ஒருவர் கிடைத்தால் போதும் என்ற மனநிலை இல்லாதவர்கள். காதலில் தங்கள் துணையின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கின்றனர். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள்.

எப்போதும் புதிய புதிய சோதனைகளை முயற்சித்துக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் எதிலும் உறுதியானவர்கள். ஒன்றாம் எண் நபரை துணையாகக் கொண்டவர்கள் தங்கள் உறவில் நிச்சயம் ஒரு விசுவாசத்தை எதிர்பார்க்க முடியும்.