மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி! தற்போது எப்படியிருக்கிறார்?

324

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி, உறவினர்கள் யாரும் பார்க்க வராததால் கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விருதுநகரின் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, இவர் கல்லூரி மாணவிகள் சிலரை தவறாக வழிநடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டார்.

இவருக்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நிர்மலா தேவியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை, இது எனக்கு வருத்தத்தை தருகிறது என தெரிவித்துள்ளார்.