12-வது வயதில் கர்ப்பமான சிறுமி… தாயார் கூறிய அதிர்ச்சி வார்த்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்

831

இந்திய மாநிலம் கேரளாவில் 12 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்க தாமப்படுத்துவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த பாலியல் புகார் வழக்கு இதுவரை விசாரணை கட்டத்தை தாண்டவில்லை சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அப்போது 5-ஆம் வகுப்பில் படித்து வந்துள்ளார். ஒருமுறை பாடசாலை செல்ல தாயாராகும்போது அந்த நபரை குறித்த சிறுமி முதன் முறையாக அவரது குடியிருப்பில் கண்டுள்ளார்.

மாமா என கூறி தாயார் தமது மகளுக்கு அவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனிடையே குடும்ப தகராறு காரணமாக சிறுமியின் தந்தை குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் தாயார் தமது காதலருடன் சென்றுள்ளார். சிறுமி தமது பாட்டியுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு பின்னர் அந்த மாமாவை திருமணம் செய்து கொண்ட சிறுமியின் தாயார், வாடகை குடியிருப்பு ஒன்றில் மூவருமாக குடியேறியுள்ளனர்.

இதனிடையே சிறுமியை பாடசாலைக்கு செல்ல வளர்ப்பு தந்தை அனுமதி மறுத்துள்ளார்.

அந்த குடியிருப்பில், தாயார் இல்லாத வேளைகளில் வளர்ப்பு தந்தையால் பாலியல் சித்திரவதைக்கு இரையாகத் தொடங்கினார் சிறுமி.

தாயாரையும் பாட்டியையும் கொலை செய்வதாக கூறி மிரட்டி அந்த வளர்ப்பு தந்தை சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி வந்துள்ளார்.

இருப்பினும் ஒருகட்டத்தில் தமது தாயாரிடம் சிறுமி, அந்த மாமா மிகவும் மோசமானவர், தம்மை தாக்கியதாக சிறுமி கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திடீரென்று ஒருநாள் சிறுமி நினைவற்று சரியவே, அவர் கர்ப்பமாக இருப்பது தாயாருக்கும் அந்த வளர்ப்பு தந்தைக்கும் தெரியவந்தது.

2015 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை அடுத்து மருத்துவர் ஒருவரை அணுகி ரகசியமாக கருவை கலைத்துள்ளனர்.

சிறுமி சில நாட்களாக பாடசாலை வரவில்லை என்பதை கவனித்த நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில், தாயாரும் வளர்ப்பு தந்தையும் சிக்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதான இருவரும் 2016 ஆம் ஆண்டு முதல் விசாரணை கைதிகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுமியின் பாதுகாப்பை அரசு காப்பகம் ஏற்றுக்கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரும் தற்போதும் விசாரணை கைதிகளாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.