HIV தொற்று இருந்த கணவரை ஒதுக்கி வைத்த மனைவிக்கு நேர்ந்த கதி! நடந்த விபரீத சம்பவம்

451

தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்று இருப்பதை காரணம் காட்டி, வீட்டிற்குள் விடாத மனைவியை கணவர் கழுத்தறுத்துவிட்டு, அதன் பின் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மேற்கொண்ட சோதனையில் எச்.ஐ.வி தோற்று இல்லை என்பது உறுதியானது.

இதனால் குழந்தைகள் மற்றும் தனக்கு அந்த நோய் பரவிவிடக் கூடாது என்பதற்காக, கணவனை ஒதுக்கி வைத்துள்ளார்.

கணவனும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் தன்னை ஒதுக்கி வைத்துவிட்டதால், ஆத்திரமடைந்த அவர் இன்று காலை அவரின் வீட்டிற்கு சென்று, மிளகாய் பொடியை தூவி மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அதன் பின் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவம் அங்கிருக்கும் மக்களுக்கு தெரியவர, உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எச்.ஐ.வி. தொற்று இருப்பவரின் ரத்தம் சிந்திய வீட்டை, அந்தப் பகுதி மக்கள் இணைந்து சுத்தம் செய்த போது, அது காற்று மூலம் பரவும் என்ற வதந்தி பரவியதால், அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் குளியல் போட்டுள்ளனர். ஆனால் எச்.ஐ.வி இரத்தம் மூலம் மட்டுமே பரவும் என்பது அறியாமையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.