அழகிய மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட கணவன்.. உதவிய மாமியார்! திடுக்கிடும் பின்னணி

1024

மனைவியின் ஆபாச மற்றும் அந்தரங்க புகைப்படங்களை கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் மனைவியின் புகாரின் பேரில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். இவர் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி சொல்லி கொடுத்து வருகிறார்.

இவருக்கு இளம் பெண் ஒருவரோடு கடந்த 2013-ல் திருமணம் ஆன நிலையில் தம்பதிக்கு பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கணவன் – மனைவியிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது மனைவி ஆபாசமான நிலையில் இருக்கும் புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து அதிரவைத்துள்ளார் கணவன்.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி அந்த புகைப்படங்களை மார்பிங் செய்து அவர் வெளியிட்டுள்ளதாக பொலிசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக கணவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மனைவி அளித்துள்ள புகாரில், கடந்தாண்டு என் மாமியார், என்னுடைய நிர்வாண மற்றும் அந்தரங்க புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை வெளியிடுவேன் எனவும் மிரட்டினார்.

நான் இதை அப்போது பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, ஆனால் தற்போது வேறு பெண்ணின் உடலுடன் என் முகத்தை மார்பிங் செய்த புகைப்படத்தை கணவர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார்.

என் கணவர் என்னை நிறைய துன்புறுத்தியுள்ளார், அதனால் தான் விவாகரத்து கோரினேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் அந்த புகைப்படங்களை யாரோ ஒருவரின் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் கண்டுப்பிடித்தேன், அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் கிடையாது, உண்மையான புகைப்படங்கள் என கணவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கணவர், தனது மனைவியின் வண்ணப் புகைப்படங்களுடன் வாக்குமூலத்தை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.